நாமக்கல் மாவட்டத்தில் உதவித் தொடக்கக்
கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என
நாமக்கல் மாவட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மாவட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்
தலைவர் பெ.பழனிசாமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சூ.அமல்ராஜ்
வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ம,கலைச்செல்வன், மாநில செயற்குழு
உறுப்பினர் வெ.பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் முருக.செல்வராஜன் தீர்மான விளக்கவுரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஆசிரியர்களுக்கு அஞ்சல் வழிவாக்கு சீட்டுகளை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக வழங்கிட வேண்டும். வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஒருமாத கால ஊதியத்தை தேர்தல் கால ஊதியமாக வழங்கிட வேண்டும்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்களில் தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் ஆசிரியர் குறைதீர் முகாம்களை முறையாக நடத்திட வேண்டும்.
பள்ளிபாளையம், வெண்ணந்தூர் பகுதிகளின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக வங்கி கணக்கில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை தணிக்கைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெண்ணந்தூர், எருமப்பட்டி பகுதிகளில் தொடக்கக் கல்வி அலுவலக எழுத்தர் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் வட்டாரச் செயலாளர்கள் ஆர்.ஜெகந்நாதன் (வெண்ணந்தூர்), ரா.திருவேங்கடம் (திருச்செங்கோடு), மா.உமாமகேஸ்வரி (எருமப்பட்டி), ஆ.சரவணன் (மோகனூர்), மெ.சங்கர் (கபிலர்மலை) வட்டாரத் தலைவர்கள் கி.விஜயன் (ராசிபுரம்), கே.செளந்தரராஜன் (நாமகிரிப்பேட்டை), பா.சாந்தக்குமார் (திருச்செங்கோடு), வட்டாரப் பொருளாளர்கள் கா.செல்வம் (சேந்தமங்கலம்), கே.தியாகராஜன் (நாமகிரிப்பேட்டை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக