ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-2015ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் (கலந்தாய்வு) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் On-line –ல் 27.08.2014 அன்று காலை 11.00 மணி முதல் காலை 11 மணி முதல் நடைபெறும்.
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு On-line-ல் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் On-line- கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக