இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதை நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த தினத்தில் எனது இயக்க முன்னோடிகளை பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு முற்போக்கு இயக்கம் இச்சமுதாயத்திற்கு இவ்வளவு பணியாற்றுவது வியப்பில்லை. ஆனால் அதை தலைமையேற்கும் பொறுப்பாளர்கள் சுயநலமின்றி செயல்படுவது என்பது ஆச்சரியம்தான்.
என்னை இந்த இயக்கத்தில் ஆட்கொள்வதற்கு முழுமுதற் காரணமாய் இருந்த எமது முன்னாள் பொதுச்செயலாளர் திரு.பர்வதராஜன் அவர்களுக்கும், ஒரு இயக்கத்தை வழி நடத்துவது எப்படி என்பதை எங்களுக்கெல்லாம் பீஷ்மராய் இருந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் இயக்கத்தின் விதைகளில் ஒருவரான் நான் பெரிதும் மதிக்கும் முன்னாள் மாநிலத்தலைவர் மதிப்பிற்குறிய கே.ஏ.டி. அவர்களுக்கும், தலைமை பண்பை இன்றளவும் கற்றுத்தரும் மாநிலத்தலைவர் திரு.டி.கே. அவர்களுக்கும், இயக்க உறுப்பினர்களின் வினாக்களுக்கு சலைக்காமல் நேர்த்தியான பதில் அளித்து என்னை வியப்பில் ஆழ்த்தும் இனிய தோழர் முன்னாள் பொதுச்செயலாளர் திரு.முருக.செல்வராசன் அவர்களுக்கும், இயக்கத்தின் வலிமையான அடித்தளத்திற்கு நிதி ஆதாரத்தை பெருக்கிய நேர்மையாளர் மாநிலப்பொருளாளர் திரு.மோஸஸ் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் பொறுப்பு ஏற்றவுடன் தன்னுடைய முதல் இயக்குநர் சந்திப்பில் உறுப்பினர்களின் கோரிக்கைகளை தெளிவாக எடுத்துரைத்து வென்றெடுத்த தோழர் பாலச்சந்தர் அவர்களுக்கும், சிவகங்கையில் இயக்கத்தை வலுவாக்குவதற்கு ஊன்றுகோலாய் இருந்த திண்டுக்கல்லின் முன்னாள் மாவட்டச்செயலாளரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் கணேசன் அவர்களுக்கும், எனது இயக்க பணிக்கு ஆறுதல் அளித்து வரும் எனது சகோதரன் மாநிலத்தணைத்தலைவர் திரு.ஜோசப்ரோஸ் அவர்களுக்கும், என்னை முழுமையாக ஆட்கொண்டு இயக்கப்பணிக்கு முழு ஆதரவு அளித்து வரும் எனது வாழ்க்கைத்துணை திருமதி.கீதா அவர்களுக்கும் மற்றும் என்னுள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இயக்க உணர்வை ஊட்டிய அனைத்து நல்ல இதயங்களுக்கும் இந்த புரட்சிகரமான தினத்தில் தோழமையுடன் நன்றியை பகிர்ந்து கொள்கிறேன்.
வெல்லட்டும்! வெல்லட்டும்! இயக்கப்பணி வெல்லட்டும்.
தோழமையுடன்......
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டத்தலைவர்
சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக