எந்த பெயரை உச்சரித்தால் எங்கள் நாடி நரம்புகள் எல்லாம் சூடேறி உற்சாகம் பிறக்கமோ! அந்த இயக்கத்தின் 11வது மாநிலத் தேர்தல் தியாக வேங்கை உழன்ற இடமாம் திருப்புரில் நடந்தேறியது.
ஒரு இயக்கத்தின் ஜனநாயகம் எவ்வாறு கட்டிக் காக்கப்படுகிறது என்பதை நான் நேரில் அனுபவித்த காட்சி.
மாநிலப் பொருளாளராக, மாநிலத் தலைவராக இந்த . இயக்கத்தை வழி நடத்திய அருமை தோழர் கண்ணன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கு தன் தலைமை பதவியை விட்டுக் கொடுத்து ஓதுங்கி நின்று மகிழ்வுடன் பதவியேற்பு காட்சியை இரசிக்கிறார். STFI துணைத் தலைவர் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு மாவட்ட கிளையின் வளர்ச்சிக்கு பாடுபட தயாராகிவிட்டார். சென்ற முறை மாநில மையத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் பலர் இந்த முறை அடுத்த மாவட்டத்திற்கு வழி கொடுத்து வாழ்த்துகிறார்கள்.
இரண்டு பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அதுவும் ஒரே மாவட்டத்தை சார்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள். முறையாக வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர் அறிமுகத்தில் தன்னை எதிர்த்த நின்ற வேட்பாளரை கைபிடித்து மேடைக்கு அழைத்து அறிமுக நிகழ்வில் இருவரும் மேடையில் தோன்றும் காட்சி என்பது எந்த இயக்கத்திலும் காண முடியாதது. வாக்கு எண்ணிக்கை முடிவில் குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்ற வேட்பாளரை ஓடி வந்து கை குலுக்கி வாழ்த்தியது என்பது இதுதான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பதை உணர்தியது.
ஜனநாயத்தின் உச்சபட்ச காட்சிகள் அரங்கேறிய தெற்கு ரோட்டரி திருமணமண்டபத்தில் இருந்த எனக்கு இதை மற்றவர்களிடம் பகிராமல் இருக்க இயலவில்லை.
அதுவும் பதவியேற்றவுடன் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் அவர்கள் ஒவ்வொரு பொறுப்பளரும் ஏன், எந்த சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை தனக்கே உரிய தலைமை பண்புடன் விளக்கியது என்பது மிகவும் இரசிக்க கூடியதாக இருந்தது.
தோழர்களே நான் இந்த இயக்கத்தில் இருப்பதில் பெருமையாக கருதுகிறேன். இங்கு தலைமைக்கும், அடிமட்ட உறுப்பினருக்கும் இடைவெளி என்பது மயிரிழை அளவே என்பதுதான் அற்புதம். பொதுச் செயலாளர் தன்னுடைய உரையில் எங்களை நீங்கள் எந்த நேரத்திலும் தொந்தரவு செய்யலாம் என்ற தன்னுடைய அவாவை மன்றத்தில் வெளியிட்டு பொதுக்குழுவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்கள்.
வாழ்க ஜனநாயகம்!!!
வளர்க TNPTF
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தோழமையுடன்.....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக