வருகிற 18.1.2015 திருப்பூர் நகரில் தெற்கு ரோட்டரி திருமணமண்டபத்தில் நடைபெற இருக்கும் ஒரு ஜனநாயகமிக்க இயக்கத்தின்(TNPTF) மாநிலத் தேர்தல். எதிர்கால சவால்களை தங்களுடைய கூரிய சிந்தனையால் எதிர் நோக்க இருக்கும் ஒரு சமரசமற்ற தலைமைகளை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். முகம் பாராமல் முக நூல் வழியே கருத்துக்களை பரிமாறிய நட்புகளை முகம் பார்த்து உரையாட இருக்கிறோம். ஒரு சமூக சிந்தனையுள்ள இயக்கத்தில் உறுப்பினர் என்ற தகுதியுடன் கல்வி நலன் மட்டுமல்லாது சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற ஒரு சமரசமற்ற போராளிகளே ! ஜனநாயகத்தை தாங்கி பிடிக்கும் தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒரு இனம் புரியாத சந்தோசம் மேலோங்குவதை தடுக்க இயலவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் தன் பங்கேற்பு ஓய்வுதியத்தை இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டிய மிகப்பெரிய சவாலும், அரசு பள்ளிகளை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் என சவால்கள் எதிரே அணி வகுத்து நிற்கின்றன. இந்த இயக்கத்தை கட்டமைத்த தலைவர்கள் நமக்கு காட்டிய வழியை தடம் மாறாமல் பின்பற்றி இந்த சமுதாயத்தை முன்னேற்றுகின்ற வழிகளை ஆராய வேண்டிய தருணம் இது. எனவே தோழர்களே உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். நான் மிகவும் மகிழ்வுடன் பங்கேற்கும் பொங்கல் விழா ஒரு புறம், என் வாழ்க்கையில் சமூக - முற்போக்கு சிந்தனைகளை வித்திட்ட இயக்கத்தின் ஜனநாயக திருவிழா மறுபுறம் என இரட்டிப்பு மகிழ்வில் தித்திக்கின்றேன். ஒரு விழாவில் என்னோட இரண்டற கலந்த பழைய நட்புகளை, இனிய உறவுகளை கிராமத்தில் சந்திக்க இருக்கின்றோம் என்ற அவா, மறுபுறம் முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவரும் ஒருங்கே சங்கமிக்கும் ஒரு விசித்திரமான வேகத்தில் இயங்கி கொண்டிருக்கும் நகரில் தன்னலமற்ற தோழர்களை சந்தித்து சிந்திக்க இருக்கிறோம் என்ற ஆசை என இந்த தமிழர் திருநாள் வாழ்க்கையில் மறக்க இயலாத திருநாள்.
மீண்டும் ஆவலுடன் உங்களை எதிர் நோக்கி தோழமைகளே...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF
சிவகங்கை மாவட்டம்
மீண்டும் ஆவலுடன் உங்களை எதிர் நோக்கி தோழமைகளே...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF
சிவகங்கை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக