இன்று சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஜாக்டோ போராட்ட ஆயத்த கூட்டம் தோழர் இளங்கோ மற்றும் சகோதரர் ஜோசப் சேவியர் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. ஜாக்டோவில் இணைந்துள்ள இயக்கங்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்டன. இயக்க பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் வட்டார நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதமாக எழுச்சியுடன் உரையாற்றினர். வருகிற மார்ச் -8ல் சிவகங்கையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி தமிழகத்திற்கே முன் மாதிரியாக விளங்கும் வகையில் சிறப்பாக நடத்திட அனைவரும் உறுதி பூண்டனர். இன்று முதல் அதற்கான ஆயத்த வேலைகளை வட்டார நிர்வாகிகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர். 25.2.2015 அன்று தமிழக முதல்வர் ஜேக்டோ உயர்மட்ட தலைவர்களை சந்திக்க இருப்பதால் அதற்கு பின்னால் மாவட்ட ஜேக்டோ நிர்வாகிகள் சந்திப்பது என முடிவாற்றப்பட்டது. போராட்ட களம் சூடாகி விட்டதால் நிர்வாகிகளே தயாராகுங்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக