பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2/08/2015

மறந்தாயா? விஜய்....

எழில் மிகு தோற்றம். எப்பொழுதும் புன்சிரிப்பு. கல்லல் வட்டாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளையை மீள் கட்டமைக்க நீ மேற்கொண்ட முயற்சிகள், கிளை கட்டமைக்கப்பட்ட பின்பு நடந்தேறிய விழாக்களில் நீ செயல்பட்ட வேகம் என மாநில நிர்வாகிகளே உன்னை உற்று நோக்க வைத்த விதம்... என எவ்வளவு வேகமாக நீ செயல்பட்டாயோ? அதே வேகத்தில் எங்களை விட்டு, இந்த இயக்கத்தை விட்டு எப்படி சென்றாய் விஜய்.
இன்று அதிகாலை 6.00மணி கல்லல் வட்டாரக்கிளை செயலர் தோழர் சேவியர் சத்தியநாதனின் கைபேசி அழைப்பு, ஆர்வத்துடன் எடுத்தால் தோழா விஜய் நம்மை விட்டு...இந்த உலகத்தையே விட்டு சென்று விட்டான் என்ற அவரின் குரல் நடுங்கிய செய்தி என்னை ஒரு நிமிடம் அதிர வதை;து விட்டது. செய்தி உண்மைதானா என நான் உணர்வதற்குள் என் கைபேசி என் விரல் இடுக்கிலிருந்து நழுவி விட்டது. எப்படி? எங்கே? யாரிடம் கேட்பது. என ஒரே பதற்றம். நீ நிழல் போல தொடர்வாயே என் அருமை நண்பன் லுயிஸை அழைக்கலமா? என்றால் விசயம் அறிந்தால் அவன் தாங்குவானா? என்று ஒரே குழப்பம். அதே நேரத்தில் ஜஸ்டின் குறுஞ்செய்தி அதை உறுதிபடுத்தியது.
எப்படி விஜய் இது சாத்தியமாயிற்று. மூன்று முறைக்கு மேல் காலனின் வாசல் வரை சென்று திரும்பிய உன் தந்தையின் உடல் நலம் பெற உடனிருந்து மருத்துவமனையில் உதவிக்கொண்டிருந்த நீ,  தந்தை சுகமாகிவிட்டார்  பயமில்லை என்ற மருத்துவரின் உறுதி மொழியை உள்வாங்கி கொண்டு 4வது முறையாக காலனை வென்ற தந்தையை நினைத்து மகிழ்வுடன் அவர் கூடவே மருத்துமனையில் உறங்கிய நீ எப்படி சுவாசிக்க மறந்தாய்?
நீ சுவாசமாக நினைத்த இந்த இயக்கத்தை, உயிராக நினைத்த நட்பை, நிழல்போல் நீ தொடர்ந்த அருமை நண்பன் ஆரோக்கிய லூயிஸ் லெவேயை, எங்களை, குடும்பத்தை எப்படி விஜய் மறந்தாய்?
எந்த் செய்தியையும் இயக்க தேழர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பொழுது கலங்காத நான் உன் இறப்பு செய்தியை அனுப்பும்பொழுது உள்ளம் கலங்கிவிட்டேன் நண்பா. குறுஞ்செய்தி கிடைத்த மறு நிமிடம் இயக்க தோழர்களின் இடைவிடாத தொலைபேசி அழைப்பிற்கு பதில் சொல்ல என்னால் இயலவில்லை. எப்படி நடந்தது என என்னை உலுக்கும் இயக்க நண்பர்களிடம் எப்படி உரைப்பேன் விஜய்.
செய்தி அறிந்தவுடன் சென்னை அலுவலகத்தில் முகாமிட்டிருக்கும் மாநிலத்தலைவர் திரு.மோசஸ், மாநிலப்பொதுச்செயலாளர் பாலச்சந்தர், முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் என எனக்கும், மாவட்ட கிளைக்கும் ஆறுதல் சொன்னதை எப்படி உன்னிடம் தெரிவிப்பேன். மாநிலத் தலைமையால் உடனடியாக இங்கு அனுப்பப்பட்ட  துணைப்பொதுச்செயலாளர் தோழர் மயில் உன் உடலுக்கு மாலை அணிவித்து மரியதை செய்கிறார் படை சூழ சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் இருந்து வந்துள்ள தேழர்களுடன்.... விஜய் எழுந்திருப்பாயா? ஒரு முறை மீண்டும் எழுந்திருப்பாயா? பிழக்க வழியில்லை என்ற தந்தையினை அழைத்து மருத்துவமனையில் உடனிருந்து அவரை மீட்டுடெடுத்த நீ.... ஏன் சுவாசத்தை நிறுத்தி விட்டாய்? இது நியாயமா?
இன்றளவும் என் மனதில் அழியாத ஓவியமாக.... முதன் முதலாக சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் வட்டாரத்தை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் என மாவட்ட மையம் முடிவு பண்ணி முதல் அமபை;பாளர் கூட்டம் கல்லல் தொடக்கப்பள்ளியில் மாலை 5.00 மணிக்கு மாவட்ட மையத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் ஒன்று கூடுகிறோம். நீ ஓடியாடி எங்களை உபசரிக்கிறாய். டீ தருகிறாய். நான் அனைவரிடமும் பெருமையாக என் சகோதரன் என்று உரிமையுடன் அறிமுகம் செய்கிறேன். என்று என்னை நீ முதன் முதலில் சந்தித்தாயோ அன்று முதல் அண்ணன் என்று சொல்லுக்கு மறு பேச்சில்லை. எனது வாழ்க்கை துணையும் நானும் கடந்த நாடளமன்ற தேர்தல் பணி முடிந்து திரும்புகையில் கல்லல் பேருந்து நிலையத்தில் எதார்த்தமாக சந்தி;த்த நீ ஓடோடி ஸ்வீட் வாங்கி தந்தாயே? இப்போ எங்கே அவன் என்று அக்கா என்று அன்போடு அழைக்கும் என் துணைவி கேட்கிறாள் என்ன சொல்ல விஜய். கிட்டதட்ட 18 ஆண்டு கால நட்பு உன்னோடு. கூடவே திரிந்தான் தனியாக விட்டு சென்றுவிட்டான் என் நண்பன் லூயிஸ் காலையில்  என்னுடன் தொலைNபியில் அழுதானே அவனுக்கு என்ன சொல்வது.
வா விஜய் மீண்டும் வா........
சுவாசிக்க மறந்ததை மறந்து மீண்டும் வா விஜய்.
எனக்காக,  எங்களுக்குகாக, இந்த மாவட்ட கிளைக்காக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சொந்தங்களுக்காக, மீண்டும் வா விஜய்...
நீ வருவாய் என் நம்பிக்கையுடன்................
             உள் பிரிவால் வாடும்....
                முத்துப்பாண்டியன் .ஆ