சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவிப்பொறும் பள்ளிகளும் உடனடியாக TAN எண் பெற்று இணையவழி சம்பளம் தாக்கல் செய்தால்தான் மார்ச் மாதம் சம்பளம் அனுமதிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட கருவூலகத்தால் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக நாம் மாவட்ட கருவூலக அலுவலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக இவ்விசயம் சாத்தியமில்லை. ஏப்ரல் மாதத்தில் தான் சாத்தியப்படும் என்று கூறினோம். மேலும் இந்த மாதம் பழைய முறையில் சம்பள் பட்டியல் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த மாவட்ட கருவூலக அலுவலர் நமது கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்ததோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவிக் கருவுலக அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தார். கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கருவூலக அலுவலர் அவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக நன்றி.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தோழமையுடன்....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தோழமையுடன்....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக