பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/13/2015

சி.ஆர்.சி. பங்கேற்பிற்கு ஈடுசெய் தற்செயல் விடுப்பு அனுமதி. TNPTF கோரிக்கையை ஏற்றது மாவட்ட நிர்வாகம்

சிவகங்கை மாவட்டத்தில் குறுவளமைய பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை சமீப காலமாக அதிகரித்து வந்தது. இது குறித்து நாம் நமது மாநில மையத்தில் முறையிட்டோம். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தொடக்கக்கல்வி இயக்குனர் உறுதியளித்துள்ளதாக மாநில மையம் நமக்கு பதில் தந்தது.
ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களில் வாய் மொழியாக ஈடு செய் தற்செயல் விடுப்பு அனுமதித்தால் மற்ற ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் தங்களுக்கும் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நாம் உடனடியாக இது குறித்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கும், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலருக்கும் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தோம். அலைபேசியிலும் தொடர்பு கொண்டு நமது கேரிக்கையின் நியாயத்த உணர்தினோம்.
இது குறித்த விரிவான செய்தி தினகரன், தினமலர் நாளிதழ்களில் தமிழ்நாடு ஆரம்பபப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை என்றே தலைப்பிட்டு வெளி வந்தது. உடனே சுறுசுறுப்பான மாவட்ட கல்வி நிர்வாகம் நமது நியாயமான கோரிக்கை குறித்து விவாதிக்க ஆரம்பித்தது. நாமும் மீண்டும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கையின் மீது நியாயமான முடிவு எட்டப்பட வேண்டும் இல்லையேல் கல்வித்துறையின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கருத்தாய்வு மைய கூட்டரங்கு முன்னிலையில் அனைத்து ஆசிரியர் இயக்கங்களையும் இணைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவாற்றப்பட்டுள்ளதை தெரிவித்தோம். சகோதர இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களும் இது குறித்து நம்மிடம் தொடர்பில் இருந்தனர்.
மேல்நிலை தேர்வு பணிக்காக சிவகங்கை மாவட்டம் வந்துள்ள எஸ்.எஸ்.ஏ. இணை இயக்குனர் மதிப்புமிகு குப்புச்சாமி அவர்கள் பத்திரிக்கைச் செய்தி அறிந்து உடனடியாக கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்கள். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோரிக்கை நியாயமானது. உடனடியாக ஈடுசெய் தற்செயல் விடுப்பு அனுமதிப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலருக்கு தெரிவியுங்கள் என கேட்டுக்கொண்டார்கள். நாமும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை தொடர்பு கொண்ட பொழுது மாலை நடக்கும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் கூட்டத்தில் தெளிவாக வழிகாட்டுதல் அளிப்பதாக நம்மிடம் உறுதியளித்தார்கள்.
சிறிது நேரத்திலேயே சிவகங்கை அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்து உதவி திட்ட அலுவலர் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இணை இயக்குனர் மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கு வழிகாட்டுதல்கள் கொடுத்துள்ளார்கள். அவர்கள் மூலம் உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்கள். நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயல்பாடுகளை பாராட்டியதோடடு வருகிற 14.3.2015 அன்று நடக்கவிருக்கும் கருத்தாய்வு கூட்டத்தில் ஆசிரியர்களை குறித்த நேரத்திற்குள் பங்கேற்கு அறிவுறுத்துமாறு நம்மிடம் கேட்டுக்கொண்டார். நாமும் நிச்சயமாக அக்கருத்தை ஏற்றுக்கொண்டோம். எனவே நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால் 14.3.2015 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த 'கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்' இரத்து செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்குள் பயிற்சியில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இணை இயக்குனர், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கும், எமது இயக்க செய்திகளை தொடர்ந்து வெளியட்டு வரும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எமது இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!!
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF
சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக