ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியிடாமல் கல்வித் துறை மெüனமாக உள்ளது. இதனால் வெளி மாவட்டம் மற்றும் ஒன்றியங்களுக்கு மாறுதல் கோரி பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக ஆசிரியர்களிடம் மனுவை பெற்று காலிப் பணியிடங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மே மாத விடுமுறையிலேயே கலந்தாய்வை நடத்தவும், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கிட வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக