5/31/2015
பாஸ்போர்ட்: அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல
லேபிள்கள்:
Educational News
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுத்துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது தடையின்மைச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. சில அரசு அலுவலகங்களில் தடையின்மைச் சான்று பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய வெளியுறவுத் துறை, தடையின்மைச் சான்றுக்குப் பதிலாக புதிய நடைமுறையை பின்பற்றக் கூறியுள்ளது.
இதன்படி அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் தடையின்மைச் சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை முன் அறிவிப்பாக படிவம் "ச' இல் தெரியப்படுத்த வேண்டும். அதன் நகலை பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால் போலீஸ் அறிக்கை பெற்று பாஸ்போர்ட் வழங்கப்படும். ஊழியருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய "ச' படிவத்தை பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி முறையில் புதிய செயல்முறை மாற்றங்கள் தேவை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், அதிக தேர்ச்சி விகிதத்தை காட்டுவது, பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் தகவல். அதே சமயம், பிளஸ் 2வகுப்புகளில் இந்த மாணவர் அனைவரும், அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் கல்வியை நோக்கி பயணிப்பரா என்பது, சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஏதாவது ஒரு பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றவர்கள், தமிழை முதல் பாடமாக எடுக்காமல், அதேசமயம், 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள், மாவட்ட அளவில் முதல் 10 ’ரேங்க்’ அளவில் இடம் பிடித்தவர்கள் ஆகியோருக்கு, விரும்பிய பாடம் கிடைத்து, பிளஸ் 2 படிக்க வாய்ப்பு ஏற்படும். ஆனால், 75 முதல் 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், பல ஆண்டுகளுக்கான கேள்வித் தாள், அதற்கான விடைகளை உருவேற்ற தவறியிருக்கலாம். தங்கள் திறமையை நம்பி வென்றவர்களாக இவர்களை பொதுவாக எடை போடலாம். ஆனால், அவர்கள் விரும்பும் கல்வி கிடைப்பது சிரமம்.
பள்ளிக்கல்வி முடிந்து, வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கும் இம்மாணவர்களுக்கு, ’ரேங்க்’ அல்லது இவர்கள் மதிப்பெண் சதவீதம் ஆகியவை சுமையாகலாம். இவர்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்களை அல்லது அப்பள்ளிகளை மதிப்பீடு செய்யவும், இது அளவுகோலாகாது. கல்வியில் முன்னணி மாநிலமாக உள்ளதமிழகத்தில், தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வியை பின்பற்றிய போதும், 6 முதல் 14 வயது வரை உள்ளவர்களை, கட்டாயக் கல்வி சட்டப்படி சேர்ப்பதில் குளறுபடிகள் உள்ளன.
இதற்கான ஒதுக்கீட்டை, பொறியியல் கல்லூரி சேர்க்கை முறை போல, அரசே அமல்படுத்த, தனியார் பள்ளி அமைப்பு கூறிய யோசனையை, நடப்பாண்டில் எளிதில் அமலாக்கம் செய்ய முடியாது. ஊராட்சி பகுதிகளில் அமைந்த, தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை அங்கீகரிக்க வலியுறுத்துவதும், 10 ஆண்டுகள் ஆன, தனியார் பள்ளிகள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதுமான, இவர்கள் கோரிக்கையை, கல்வித்துறை பரிசீலித்து, இப்பள்ளிகள் இயங்கும் விதத்தை ஆய்வு செய்தாலும் நல்லதே.
சி.பி.எஸ்.இ., கல்விக்கும், பல்வேறு தொழில்நுட்ப திறன் கூடிய கல்விக்கும், முக்கியத்துவம் அதிகரிக்கும் சூழ்நிலையில், புதிய செயல்முறை மாற்றங்கள் தேவை. மாநிலம் சம்பந்தப்பட்ட முன்னுரிமைத் துறை என்பதால், அரசு பள்ளிகள் மட்டும் அல்ல; தனியார் பள்ளிகள் குறித்தும், ஒரு அணுகுமுறை வர வேண்டும். அதிக அளவில் மாணவர் தேர்ச்சியை முடிவு செய்யும் வளர்ச்சி பெற்ற சூழ்நிலையில், அடுத்தடுத்த பிரச்னைகளை ஆராய வேண்டிய நேரம் இது. அதன் மூலம், மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் தகுதிக் கல்வி தமிழகத்தில் உருவாக வாய்ப்பு வரும்.
நாளைய தொடக்கம்... வருங்காலத்தின் வளர்ச்சியாகட்டும்
லேபிள்கள்:
SVG TNPTF
ஆசிரியர் தோழர்களே கோடை விடுமுறை நிறைவு பெற்று புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாளைய தொடக்கம்தான் எதிர் கால இந்தியாவை வடிவமைக்கப்போகும் மாணவர்களை ஒரு நல்ல குடிமகனாக உருவாக்க இருக்கும் நாள். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மட்டும் இல்லாமல் வாழக்கை முறையையும் கற்று கொடுங்கள். எதிர்கால சவால்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை சொல்லி கொடுங்கள். இந்தியாவை நேசிக்க கற்று கொடுங்கள். பல்வேறு புற சூழலால் தடம் மாறிக் கிடக்கும் மாணவர்களுக்கு நல்ல சிந்தனையை விதையுங்கள். உரிமைக்காக குரல் கொடுக்க கற்று கொடுங்கள். உண்மையுடன் நடப்பதற்கு பழக்குங்கள். தொடரட்டும் உங்கள் சேவை...
நம் பள்ளி, நம் குழந்தைகள், நம் தேசம், நம் இனம் என உணர்த்துங்கள்.
மீண்டும் வாழ்த்துக்கள்...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்.
நம் பள்ளி, நம் குழந்தைகள், நம் தேசம், நம் இனம் என உணர்த்துங்கள்.
மீண்டும் வாழ்த்துக்கள்...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்.
5/26/2015
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க கல்வித்துறை முடிவு
லேபிள்கள்:
Educational News
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தேர்வுகளில், கல்வி மாவட்ட வாரியாக, அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், கடந்தாண்டை விட அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என, கணக்கிடப்படுகிறது. குறைந்திருப்பின், அது குறித்து, தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சில அரசு பள்ளிகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், பொதுத்தேர்வுகளில், மாவட்ட தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுகிறது.
இதை தவிர்க்க, இப்பள்ளிகளில் எத்தனை மாணவர்கள், எந்தெந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை; அதற்கான காரணம் என்ன என, தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை கூட்டி, கருத்தை கேட்டு, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை சரிசெய்து, வரும் கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
5/23/2015
5/22/2015
திருப்பூர் பேச்சு வார்த்தை முடிவுகள்
லேபிள்கள்:
TNPTF NEWS
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருப்பூர் மாவட்டத்தில் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கு எதிரான வீரம் செறிந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக இன்று மாலை துணை ஆட்சியர் முன்னிலையில் பேச்சு வர்த்தை நடைபெற்றது.
இப்பேச்சு வார்த்தையில் திரு.ஜான் அவர்களின் தற்காலிக பணியிடை நீக்கம் எவ்வித நிபந்னையுமின்றி நீக்கிக்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்ட கிளையின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இயக்கத்தின் போராட்டங்கள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்டதாக பொதுச் செயலாளர் தோழர் பாலச்சந்தர் அறிவித்துள்ளார்.
தோற்றதில்லை!!!
தோற்றதில்லை!!!
தொழிற்சங்கம் தோற்றதில்லை!!!
5/21/2015
ஜூன் 1ல் பள்ளி திறப்பதற்கு முன் குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க உத்தரவு
லேபிள்கள்:
Educational News
சென்னை: ஜூன் 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன், குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக்கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து, வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, பள்ளிக் கல்வித்துறையிலிருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஒரு மாதம் வரை பள்ளி விடுமுறை நாளாக உள்ளதால், பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்கள் தேங்கி இருக்கும்.
அதை சுத்தம் செய்து, கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திறந்த கிணறுகள், பள்ளங்கள் இருந்தால் அதை சீரமைக்க வேண்டும். பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை, பள்ளி திறந்தவுடன் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
10ம் வகுப்பு தேர்வில் மறுகூட்டலுக்கு மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை
லேபிள்கள்:
Educational News
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மறுகூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு தேர்வில், விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம்.
இரு தாள் கொண்ட மொழிப்பாடங்களுக்கு, பாடத்துக்கு தலா 305; கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, பாடத்துக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் பள்ளியில் கட்டணத்தை பணமாக செலுத்தி, ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். ஒப்புகைச் சீட்டின் விண்ணப்ப எண் அடிப்படையிலேயே, மறு கூட்டல் முடிவுகளை அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு உடனடித் துணைத் தேர்வுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
5/10/2015
தேர்ச்சி விழுக்காடும் அரசுப் பள்ளி எதிர்காலமும்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 7 அன்று வெளியிடப்பட்டன. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம். தேர்ச்சி பெறாதவர்கள் சோர்ந்து போகாமல் அடுத்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துவோம். தேர்வு முடிவுகளோடு அரசுப் பள்ளிகள் பின் தங்கின என்றும் தனியார் பள்ளிகள் முந்தின என்றும் சில நாளேடுகள் செய்திகள் வெளி யிட்டுள்ளன. இது உண்மைதான் என்றாலும் அரசுப் பள்ளிகளை அலட்சியப்படுத்தி தனியார் பள்ளிகளை உயர்த்தும் தொனி இதில் இருப்பது தான் சங்கடம்.
முதலில், அரசுப் பள்ளி என்பது மெட்ரிக் மற்றும் தனியாரை போன்று ஒரே பிரிவைச் சார்ந்தவையல்ல. தனித்த அரசுப் பள்ளிகளோடு ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள், கள்ளர்-சீர்மரபினர், சிறுபான்மை யினர், சமூக நலத்துறை, மாநகராட்சி, நகராட்சி எனப் பல பரிவுகளின் கீழும் நடத்தப்படுகின்றன. இவற்றின் தேர்ச்சி விழுக்காடும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.இந்தப் பள்ளிகளில் படிப்போரில் பெரும்பாலோர் தலையில் எண்ணெய் வைக்கவோ, மாற்றுத் துணியும் கால்களுக்கு செருப்பும் இல்லாத வறிய மக்களின் குழந்தைகள் என்பதையும் கவனிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் வறிய நிலையில் உள்ள மாணவ,
மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். அதே சமயம், புற்றீசல்போல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப பொருளாதார வசதிக ளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தான் இரு வகை பள்ளிகளுக்குமானஇடை வெளி நன்கு புலப்படும்.அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிவது கவலைக்குரியது. இந்த நிலை நீடித்தால் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகரப்புறங்களிலும் உள்ள அரசுப் பள்ளி களில் படிக்கும் மாணவர்கள் படிப்பை இடையிலேயே நிறுத்தும் நிலை அதிகரிக் கலாம்.
இது எதிர்கால வளர்ச்சிக்கு உகந்தாக இருக்காது. அடிப்படைக் கல்வி வளர்ச்சியே பெரும் கேள்விக் குறியாக மாறும் அபாயமும் உள்ளது.எனவே, தமிழ்நாட்டில் கல்வித் தரத்தை உயர்த்த அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டியது கட்டாயத் தேவையாகும். மாநில அரசும், கல்வித்துறையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கட்டடம்,
ஆய்வுக் கூடம் என சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பொறுப்புண்டு! தன் மகனை அரசுப் பள்ளியில் படிக்கச் செய்து முன்னேறச் செய்த கோவை அசோகபுரம் பள்ளி ஆசிரியையை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது ஊக்குவிப்பது என்பதே கல்விக் கண் திறப்புக்குச் சிறந்த வழியாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)