அங்கீகாரமில்லாத சுயநிதிப்பள்ளிகளை மூட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
சிவகங்கை, அக்.2-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டசெயற்குழு கூட்டம் வியாழனன்று தாமஸ் அமலநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் இரவி,மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் வேதராஜசேகரன், சிங்கராயர், மாவட்டப பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும். புதிய பென்சன் திட்டத்தைக் கைவிடவேண்டும். அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். கல்வியை மேம்படுத்த வேண்டும்.அங்கீகாரமில்லாத சுயநிதிப் பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக