Click Here
திருப்பத்தூர் தாலுகாவை வகைப்படுத்தப்பட்ட
வீட்டு வாடகைப்படி பட்டியலில் சேர்க்க கோரிகை
சிவகங்கை மாவட்டம் 1985ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனியாக செயல்படுகிறது. இதில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் காளையார்கோயில் என 8 தாலுகா செயல்பட்டு வருகிறது. இதில் திருப்பத்தூர் தாலுகாவை தவிர மற்ற தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஊர்களும் வகைப்படுத்தப்பட்ட வீட்டு வாடைகைப்படி பட்டியலில் வைக்கப்பட்டு முறையான வீட்டு வாடகைப்படி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் திருப்பத்தூர் தாலுகாவிற்கு உடபட்ட சிங்கம்புணரி, திருப்பத்தூர் மற்றும் எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்கள் மட்டும் வகைப்படுத்தப்படாத வீட்டு வாடகைப்படி பட்டியலில் இருப்பதால் மிக குறைந்த வீட்டு வாடகைப் படி மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றாமல் அடிக்கடி மாறுதலாகி மற்ற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையை மாற்றக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தமிழ்நாடு அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது.
திருப்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்கள் தமிழக அரசின் வகைப்படுத்தப்படாத வீட்டு வாடைகைப் பட்டியலில் வெகு காலமாக இருந்து வருகிறது. இங்கு மாவட்டத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் மிக குறைவான வீட்டு வாடைகைப்படியே வழங்கப்படுகிறது.
திருப்பத்தூர் தாலுகா தொழில் துறையில் மிகவும் முன்னேறி அரசிற்கு அதிக வருவாய் ஈட்டும் பகுதியாக வளர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துள்ள இப்பகுதிகளில் வீட்டு வாடகையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது. ஆனால் நகரங்களுக்கு ஈடாக முன்னேறியுள்ள இப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி மிகவும் சொற்ப தொகை மட்டுமே வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் முறையான வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில் திருப்பத்தூர் தாலுகாவில் மட்டும் குறைவான வீட்டு வாடகைப்படி வழங்குவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பகுதிகளில் பணியாற்றுவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் இங்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்ற பகுதிகளுக்கு அடிக்கடி மாறுதலாகி சென்று விடுகின்றனர். இதனால் இங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக காலிப்பணியிடங்கள் காணப்படுகிறது. இதனால் அரசாங்கம் சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்படுவதோடு மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழக அளவில சுமார் 58 ஒன்றியங்கள் மட்டுமே வகைப்படுத்தப்படாத வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறது. நகர வளர்ச்சிக்கு ஏற்ப பல ஒன்றியங்கள் வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டு முறையான வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்திலேய அதிக தொழில் துறையை கொண்டுள்ள திருப்பத்தூர் தாலுகாவை வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் இணைத்து முறையான வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என தமிழக அரசை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர், தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு கேரிக்கை மனு அனுப்பியுள்ளோம். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெடு நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். மேலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாலுகா அளவில் அரசு ஊழியர்களோடு இணைந்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து பரிசசீலித்து வருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக