நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, களையார்கோயில் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளதாக முற்பகலே நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் தெரிவித்தார். மேலும் இந்த விடுமுறையை வருகிற 28.11.2015 அன்று பணி செய்து சமன் செய்யவும், மருதுபாண்டியர் குருபூஜையன்று அளித்த விடுமுறையை வருகிற 21.11.2015 அன்று பணி செய்து சமன் செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார். இச்செய்தியை நாமும் மாவட்ட முழுமைக்கும் உள்ள நிர்வாகிகள் மூலம் குறுஞ்செய்தி வழியில் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் ஒரு சில ஊடகங்கள் நாளை சிவகங்கை மாவட்டம் முழுமைக்கும் விடுமுறையை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டு வருவதாக இயக்க உறுப்பினர்கள் தொடர்ந்து நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள். அதிகார பூர்வமாக மேற்கண்ட 5 ஒன்றியங்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஊடகங்கள் வழியாக வரும் செய்திகள் அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல. உறுதியான செய்தியானால் நமது அமைப்பு வழியாக செய்தி அனுப்பப்படும். எனவே 5 ஒன்றியங்கள் தவிர்த்து மற்ற ஒன்றியங்களில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக அறிவிக்கப்படுகிறது. மாற்றமிருந்தால் நாளை காலையில் செய்தி அனுப்பப்படும். இது குறித்து அலைபேசி அழைப்பை தவிர்க்க வேண்டுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக