சிங்கப்பூரை சேர்நத செல்வன் சரவேஸ் தனது பிறந்த நாள் அன்று வருடந்தோறும் சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.கோவில்பட்டி மாணவர்களுக்கு அறு சுவை உணவுடன் கற்றல் உபகரண பொருட்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நாம் கடந்த மாதம் நண்பர் அஜ்மீர் அவர்களிடம் ஒவ்வொரு வருடமும் ஒரே பள்ளி மாணவர்கள் பயனடைகிறார்கள். ஏன் அதை மற்ற பள்ளிகளுக்கு விரிவு படுத்தக்கூடாது என கோரிக்கை வைத்தோம். இந்தாண்டு சர்வேஸ் அவர்களது பிறந்த நாள் அன்று சிங்கம்புணரி ஒன்றியத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் பல்வேறு பள்ளிகளை சார்ந்த சுமார் 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி சிறப்பித்துள்ளார்கள். மேலை நாட்டு நாகரீத்தில் திளைத்திற்கும் சிங்கப்பூரை சேர்ந்த செல்வன் சர்வேஸ் தயாள குணத்துடன் செயல்பட்டது ஆச்சரியப்பட வைக்கிறது. சர்வேஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தாண்டு ஒன்றியத்தில் அனைத்து மாணவர்களுக்கும் இது விரிவடைய வேண்டும். ஏழை மாணவர்கள் பயனடைய வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த சிங்கம்புணரி வட்டாரத்துணைச் செயலாளர் தோழர் அஜ்மீர் அவர்களுக்கும் என் தனிப்பட்ட முறையில் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக