சிவகங்கையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் வரவேற்றுப் பேசினார். இதில், 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் கோவில்பட்டியில் நடைபெறும் மாநில மாநாட்டில் மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்பது, மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகள் குறித்து மாவட்ட அளவில் கருத்தரங்குகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் வேதராஜசேகரன், வட்டாரச் செயலர்கள் பால்துரை, ஜேம்ஸ்கென்னடி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக