தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாடு விளம்பரக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் திரு.மோசஸ் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்தது. மாநிலத் துணைப்பொதுச் செயலாளரும், விளம்பரக்குழு தலைவருமான திரு.மயில் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன்., தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு.செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.ரவீந்திரராஜன், திரு.சுரேஷ், கருங்குளம் வட்டாரத் தலைவர் திரு.லூயிஸ் பி.ராயன், விளாத்திக்குளம் வட்டாரப் பொருளாளர் திரு.இப்ராஹீம், ஸ்ரீவைகுண்டம் வட்டாரப் பொருளாளர் திரு.தாம்சன் ஆகியோர் பங்குபெற்று தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்குழு மீண்டும் வருகிற 3.2.2016 அன்று கோவில்பட்டியில் கூடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக