தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி ஊரக வளர்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.ச.மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் திரு.ச.மயில் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்பொழுது ஊராட்சி ஒன்றி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே துப்புரவு பணியாளர்கள் நியமிக்க உத்தரவு உள்ளதாகவும் மற்ற நகர, மாநகராட்சி பள்ளிகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை என்பதை எடுத்துரைத்தார்கள். எனவே அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த கேட்டுக்கொண்டார்கள். மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்கள் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக