நாளை அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும் நாளை ஆர்ப்பாட்டம்
1. முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் எஞ்சியுள்ளவற்றிற்கு அரசாணை வெளியிட வேண்டுதல்
2. தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டுதல்
3. 7வது ஊதியக்குழு பரிந்துரை குழுவினை அறிவிப்பதோடு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பை சரி செய்யப்படும் என்ற உறுதி மொழியையும் இணைத்து ஆணை வெளியிட வேண்டுதல்.
4. வேலை நிறுத்த காலத்தை முறைப்படுத்தி ஆணை வெளியிட வேண்டுதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாலை அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் திரளாக பங்கேற்பீர்.
தோழமையுடன்...
ஆ.முத்துப்பாண்டியன்
சிவகங்கை மாவட்டச் செயலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக