பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/17/2013

பாரதிதாசன் பலகலை தொலைதூர பி.எட்.-2013 சேர்க்கை அறிவிப்பு

பாரதிதாசன் பல்கலைகழம் பி.எட்., 2013                                                                                           படிவம் விலை- ரூ500

கடைசி தேதி- 19-8-13

தேர்வு நாள்- 29-9-13 (11am-1pm)

விண்ணப்ப விற்பனை பிற விபரங்களுக்கு

www.bdu.ac.in

Coimbatore:0422-4514050/60
Mobile:9345028545 

அரசு பள்ளிகள் தரம் உயர்வு பட்டியல் தாமதம்: மாணவர் எண்ணிக்கை சரிவு

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
 
சட்டசபையில் கல்வித்துறை மானியக்கோரிக்கையில், "100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலையாகவும்; 50 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும்" என, அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை தரம் உயர்ந்த பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியாகவில்லை. தரம் உயர்வுக்கான அறிகுறி இருந்த நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இறுதி வகுப்பு முடித்த மாணவர்களை தக்க வைக்க, இறுதி வரை முயற்சித்தனர். வேறு வழியின்றி, கடைசி நேரத்தில் டி.சி., கொடுத்ததால், வேறு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.



இந்நிலையில், தரம் உயர்ந்த அரசு பள்ளிகளின் பெயர் பட்டியலை, மாவட்டம் வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம், தற்போது வெளியிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், இ.மலம்பட்டி, வேம்பத்தூர் பெரியகோட்டை, உலகம்பட்டி அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. "இதே போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த அளவிலான பள்ளிகளே, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன; வகுப்புகள் துவங்கிய நிலையில், பட்டியல் வெளியாகி இருப்பதால் 9, பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது" என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "பட்டியல் தாமதமாக கிடைப்பதால், தரம் உயர்ந்த அரசு பள்ளிகளில் போதிய மாணவர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது. தரம் உயர்ந்த பள்ளிகளில் இருந்து, வெளியே சென்ற மாணவர்களை, மீண்டும் அதே பள்ளிக்கு அழைத்து வர முயற்சிக்கப்படும்" என்றார்.

7/16/2013

சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு

மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, ரொக்கப்பரிசு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாளாக
கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்சியில், விழாவுடன், கூடுதலாக, மாவட்ட வாரியாக, சிறந்த அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என, நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, முறையே, 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும், 1 லட்சம் ரூபாய் என, மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய், ரொக்கப்பரிசு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த, பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், நேற்று, காமராஜர் பிறந்த நாள் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறந்த பள்ளியை தேர்வு செய்யும் பணி, விரைவில் துவங்கும் என, பள்ளி கல்வித் துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

அவர், மேலும் கூறியதாவது:

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, மாவட்டத்தில், சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்யும். இன்னும் ஒரு மாதத்தில், சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம், பரிசுகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டங்களுக்கும், 80 லட்சம் ரூபாய், பரிசாக வழங்கப்படும். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். மாற்றி அமைக்கப்பட்ட இந்த புதிய திட்டம், நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக, செயலர் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: டி.ஆர்.பி., எச்சரிக்கை

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த, 1.68 லட்சம் பேரில், இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள், உடனடியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள
வேண்டும்' என, டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது.

டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறியதாவது: வரும், 21ம் தேதி, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, போட்டித் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே, தங்களின், "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும், 63 ஆயிரம் பேர், பதிவிறக்கம் செய்யவில்லை. தேர்வு தேதி நெருங்கி வருவதால், அனைவரும், உடனடியாக, "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என, நினைத்தால், தேவையில்லாமல் பதற்றம் ஏற்படும். இதை தவிர்க்க, உடனடியாக, "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப எண்களையும், பிறந்த தேதியையும், சரியாக பதிவு செய்து, "சப்மிட்' கொடுத்தால், "ஹால் டிக்கெட்' கிடைக்கும். அனைத்து தேர்வர்களுக்கும், "ஹால் டிக்கெட்' வெளியிட்டுள்ளோம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகிய தினம்: 9வது ஆண்டு நினைவஞ்சலி

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் இறந்தனர். இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி செயல்பட்டு வந்தது. போதிய வசதிகள் இன்றி செயல்பட்டு வந்த அப்பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அப்பள்ளியில் படித்த குழந்தைகளில் 94 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். தமிழகத்தையே கவலையில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.
பள்ளியில் தீப்பிடித்த உடன் குழந்தைகள் அடித்து பிடித்து வெளியே ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

பள்ளியில் இருந்தவர்களில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அந்த 94 குழந்தைகள் இறந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இறந்த குழந்தைகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

10% DA due from July, 2013: NMC appeals PM to announce in next Cabinet Meeting

NMC appeals PM to announce pending DA installment: Kashmir Times.com


JAMMU, July 14: National Mazdoor Conference (NMC) today appealed to the Prime Minister to announce the pending installment of 10% DA due from July this month in favour of both central and state Govt, employees and pensioners at the next union cabinet meeting.

This was state by NMC President Subash Shastri while addressing a workers rally at Brahman Sabha here. He said that the salaried class was facing lot of economic hardship due to high inflation and price rise and the early release of DA installment would be genuine measure to provide some relief to them and adding that the delayed in release of DA would not only puts burden on the Central Govt, exchequer to liquidate the arrears but also increase the difficulties of both Central and State Governments employees and pensioners.

While recalling recommendations of Central 4th commission which was implemented in January 1986 by the then Govt. Shastri said that it also had recommended that the new pay commission should constituted as soon as DA crosses 50% of the basic pay/pension as now the DA has already touched 80% and request for early setting up of new pay panel, citing the erosion of real wages due to high inflation since implementation of the sixth pay commission recommendations.


Among others who also spoke on the occasion were Raj an Babu Khajuria,Sham Lal Sharma, Surrinder Kumar, Ragupal, Yog Raj,Com. Barkat Ram, Bupinder Singh, Ram lal Sharma, Sukhdev Singh, Anil Singh Salthia, Rakesh Padha,Vijay Bhagat, Dalip Bhagat, Sudesh Kumar and others.

Source: http://www.kashmirtimes.com/newsdet.aspx?q=19842
- See more at: http://karnmk.blogspot.in/2013/07/10-da-due-from-july-2013-nmc-appeals-pm.html#sthash.T1RYHlje.dpuf

Expected DA from July, 2013 likely to be 90% after AICPIN of March, 2013

According the press release the the All-India CPI-IW for March, 2013 rose by 1 point and pegged at 224 (two hundred and twenty four).  This one point increase showing again showing confirm 9% increase in Dearness Allowance from July, 2013 same as last months' expectation.  But this months increase in AICPIN also increased the chances for DA hike from July, 2013 to be 10%.  Therefore Expected DA from July, 2013 may be 90% .  It is also more clear from following table:-
Expect-ationIncrease/ Decrease IndexMonthBase Year 2001 = 100Total of 12 MonthsTwelve monthly Average% increase over 115.76 for DADAannouncedor will be announced
1Nov-122182490207.5079.25%
80%
1Dec-122192512209.3380.83%
2Jan-132212535211.2582.49%82%
2Feb-132232559213.2584.22%84%
1Mar-132242582215.1785.87%85%
First
1Apr-132252602216.8387.31%87%
1May-132262622218.5088.75%88%
1Jun-132272641220.0890.12%90%
Jul-13
Expected DA from July-2013
90%

Second
2Apr-132262603216.9287.38%87%
2May-132282625218.7588.97%88%
2Jun-132302647220.5890.55%90%
Jul-13Expected DA from July-201390%
Third0Apr-132242601216.7587.24%87%
0May-132242619218.2588.54%88%
0Jun-132242635219.5889.69%89%
Jul-13
Expected DA from July-2013
89%

DOWNLOAD: EXCEL FILE FOR EXPECTED DEARNESS CALCULATION TO CALCULATE YOURSELF [click on File-Menu & download]

PIB Release of CPI-IW
- See more at: http://karnmk.blogspot.in/2013/05/expected-da-from-july-2013-likely-to-be-90-percent-after-march-2013-aicpin.html#sthash.RHzu2NHb.dpuf

7/15/2013

சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவிக்க ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

சிங்கம்புணரியை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழுக் கூட்டம் தலைவர் ஞான அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்பால்துரை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Dinamani

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்ணா

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி சிவகங்கை கிளை சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
 சிவகங்கை அரண்மணை வாசல் முன் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.வேதராஜசேகரன், பி.பால்துரை, சி.ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாநில துணைத் தலைவர் டி.ஜோசப்ரோஸ் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.தாமஸ் அமலநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வி.சிங்கராயர் நன்றி கூறினார்.
 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு வழங்குவதைப் போன்ற இணையான ஊதியம் வழங்க வேண்டும், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வினைக் கைவிட்டு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை செய்திட வேண்டும்,
 நாடு முழுவதும் கட்டணமில்லாத சிகிச்சையை  ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், மொத்த பணிக்கால அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளித்திடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
 Dinamani

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - (INSPIRE)

2013-14ஆம் கல்வி ஆண்டின் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான (INSPIRE) மாவட்ட அளவிலான கண்காட்ட்சியினை ஜுலை மூன்றாம் வாரத்தில் நடத்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கடிதம் ›
click below

https://www.box.com/shared/xglk9itvueecfby4m6tw

6/21/2013

பட்டதாரி பதவி உயர்வு கனவு தகர்ந்தது.

2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவி உயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்விஇயக்குநர்  திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் TRBயிடம் இருந்து பெறப்பட'ட 1623(GO 170) பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை என உறுதி. இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

6/19/2013

அறிவிப்பு

ஆசிரியர் நலன் சார்ந்த பிரச்சணைகளை பற்றி விவாதிப்பதற்கு நமது இயக்க பொறுப்பாளர்கள் (TNPTF) வருகிற வெள்ளிக்கிழமை (21.6.13)தொடக்கக்கல்வி இயக்குநர் உள்பட உயர் கல்வி அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


       ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
 
        பி.ஏ. ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்)

கணிதம்–இயற்பியல்

பி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு)

பி.எஸ்சி. இயற்பியல் – பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம், பி.எஸ்சி. இயற்பியல் (சி.ஏ.) (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. இயற்பியல் (இன்ஸ்ட்ருமென்டேஷன் டிப்ளமோ கட்டாயம்) (பாரதியார் பல்கலைக்கழகம்)

தாவரவியல்–விலங்கியல்

பி.எஸ்சி. தாவரவியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி, லைப் சயின்ஸ் பட்டம் (பிளான்ட் சயின்ஸ், மைக்ரோ–பயாலஜி, பயோ–டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயோ–டெக்னாலஜி (சென்னை பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. சுற்றுச்சூழல் உயிரியல் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி, பயோ–டெக்னாலஜி (பாரதியார் பல்கலைக்கழகம்)

பி.எஸ்சி. விலங்கியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. லைப் சயின்ஸ் பட்டம் (அனிமல் சயின்ஸ் சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி சுற்றுச்சூழல் விலங்கியல் (சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

வரலாறு
பி.ஏ. வரலாறு – பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா (பாரதியார் பல்கலைக்கழகம்)

மேற்கண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.

தகுதித்தேர்வு விண்ணப்பம்
 
         ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 17–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கிய வண்ணம் உள்ளனர்.
 
           விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்கள், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும் செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.
எந்த அலுவலகத்திலும் கொடுக்கலாமா?
 
          விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்குச் செல்லும்போது விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலையும் வைத்துக்கொள்ள வேண்டும். கையெழுத்திடப்பட்டு கொடுக்கப்படும் அந்த ஜெராக்ஸ் பிரதி தான் ஒப்புகைச்சீட்டாக கருதப்படும்.
 
         இதற்கிடையே, விண்ணப்பம் வாங்கிய பள்ளியின் அதிகார எல்லைக்குள் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) மட்டும்தான் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமா? அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா? என்ற கேள்வி ஒருசில விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி பதில்
 
            காரணம் சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை எங்கேயாவது ஒரு பள்ளியில் வாங்கி இருப்பார்கள். அவர்களின் வீடு வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடும். இதுபோன்ற நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கென்று விண்ணப்பம் வாங்கிய பள்ளிக்கு உள்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்திற்கு செல்வதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுமே கடைசியில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு தான் வரும்.
 
              இந்த பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் அறிவொளியிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. வசதிக்கு ஏற்ப எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். எங்கு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து டி.இ.ஓ. அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.

புரளிகளை நம்ப வேண்டாம்

  இரட்டை பட்டம் பற்றிய வழக்கு இது வரை விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக பல நண்பர்களிடம் தொலைபேசி அழைப்பு அதிகம் வருகிறது.  விசாரணை அடுத்த வாரம் வரலாம் என எதிர்பார்க்கிறோம்.