பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/28/2011

பதிவு மூப்பு அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்

சென்னை:முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. காலை அல்லது பிற்பகல் என அரை நாள் வேலை, தொகுப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.பள்ளிக் கல்வித் துறையை சீரமைக்கும் வகையில், நேற்று முன்தினம் சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 775 பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், இதற்காக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்தும் முதல்வர் அறிவித்தார்.

மேலும், கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்காக, 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் கீழ், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கை வேலைப்பாடு, தையல் ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பல அரசுப் பள்ளிகளில், ஒரு வகுப்பில் 70, 80 மாணவர்கள் இருக்கின்றனர். இது போன்ற பள்ளிகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் ஏற்கனவே அடையாளம் கண்டு, மாவட்டம் வாரியாக பட்டியல் எடுத்துள்ளது. அதன்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பணி நியமனம் எப்படி? பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள், 32 மாவட்டங்களிலும் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்ற விவரங்களையும் பட்டியலிட்டு, அதை பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையிடம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் ஒப்படைத்துள்ளது.அதன்படி, ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், பதிவு மூப்பு பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், அவர்களை அந்தந்த உள்ளூர் மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, இரு துறைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மாவட்டத்தில் அதிக காலிப் பணியிடங்கள் இல்லாதபட்சத்தில், அருகில் உள்ள மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "எந்த முறையில் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறித்து, இதுவரை முடிவு எடுக்கவில்லை. அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும்' என்றார்.

சம்பளம் எவ்வளவு? பகுதி நேர ஆசிரியர்களுக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான சம்பளத்தை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் வழங்கும். மாவட்டம் வாரியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், சம்பளம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.வேலை நேரம்: ஆசிரியர்களின் பணியைப் பொருத்து, காலை அல்லது பிற்பகல் என, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அரை நாள் வேலை செய்யும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தப் பணி நியமனங்கள், அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பட்டதாரிகள் உற்சாகம்:பகுதி நேர ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு, பட்டதாரிகளிடையே படு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியாவது, "உள்ளே' நுழைந்து விட்டால், ஆட்சி முடியும் தறுவாயில், பணி நிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றனர்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை, 2016ம் ஆண்டு முதல்வர் பரிசீலிப்பார் என்பதால், பகுதி நேர வேலையில் சேர, பட்டதாரிகள் தீவிர ஆர்வத்துடன் உள்ளனர்.
Thanks: dinamalar

8/27/2011

சமையல் பணியில் ஆசிரியர்கள்: தடை செய்ய ஆசிரியர் சங்கம் மனு

புதுச்சேரி : சமையல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர். ஆசிரியர் சங்கம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள சூழலில் கற்பித்தல் பணி செம்மையாக நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இருக்கும் ஆசிரியர்களை, மதிய உணவு தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்துவது முறையல்ல.
மேலும், கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரின் கல்வி மானியக் கோரிக்கையின் 24வது அறிவிப்பாக இதே கருத்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரையில் இந்த அறிவிப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை. உணவு தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் கற்பிக்கும் ஆற்றல் வீணாகிறது. எனவே இப்பணியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதை முதல்வர் தடை செய்ய வேண்டும். அவர்களை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும். சமையல் பணிக்கு தகுந்த இளைஞர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலை பி.எட்.,-

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலை தொலைநிலைக் கல்வியில் பி.எட்., படிப்பிற்கான சேர்க்கையை அறிவித்துள்ளது. பல்கலையால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2 ஆண்டு ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக பெறப்படுகிறது. தொலைக் கல்வி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி என்ற பெயரில் டிடி யாக எடுக்க வேண்டும். www.bdu.ac.in என்ற இணையதளத்திலும், பல்கலைக்கழக அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.09.2011.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30.10.2011.

சமச்சீர் பாடத்திட்டம் இல்லை-மத்திய அரசு

இந்தியா முழுமைக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தைக் கொண்டு வரும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் கபில் சிபல், இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியில் பொது பாடத்திட்டம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை மத்திய கல்வி ஆலோசனை வாரியம் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் இதை செய்வதன் மூலம் தொழில்நுட்பக் கல்விகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் சமமான போட்டி வாய்ப்பு அமையும் என்று கூறியுள்ளது. ஆனால் இதை நடைமுறைப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை.
நாடு முழுவதும் 21 கல்வி வாரியங்கள் இணைந்து இடைநிலை கல்வியில், அறவியல் மற்றும கணிதப் பாடங்களில் பொது பாடத்திட்டத்தை கொண்டு வர இசைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கையானது 2005ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட வரைவு ஒன்றை பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் 10 ரூபாய் ப்ளாஸ்டிக் நோட்டு!

டெல்லி: இந்தியாவில் விரைவில் ப்ளாஸ்டிக் நோட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன.

ஆனால் இவை அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மை கொண்டதாக உள்ளன.

இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. இந்த பாலிமர் (ப்ளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து நியூசிலாந்து, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, புருனே, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது.

முதல் கட்டமாக சோதனை ரீதியில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. மொத்தம் 100 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் என்றும் சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் முதலில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இத்தகைய நோட்டுகளை பெருமளவில் அனைத்து மதிப்புகளிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உறவுகளே! என்ன செய்யப் போகிறோம்!!

செய்தி கேட்டபின் என்னால் சகயமாக இயங்க  முடியவில்லை. நேற்று இரவு இதன் தாக்கத்தை உணர்ந்தேன்.  விழிகளை மூடும் போதும் அம் மூன்று உருவங்களும் கண்முன்னே வந்து விரிகிறது. அவர்களை பெற்றவர்களும், அவர்கள் உறவுகளும் விடும் கண்ணீர் என் மனதையும் வந்து நனைத்து கனக்க வைக்கிறது. 

நாள்  குறித்து தன்மகனை பலிகொடுப்பதென்பது  ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமையான விடயம் என்று உணரமுடியாத அளவுக்கு நான் ஒன்று மரத்துப்போய்விடவில்லை. 
ஒருவேளை, முசோலினி வாரிசுகளுக்கு அந்த தேவை இருக்காலம். கூடவே  ஆசனங்களை  தக்கவைக்க அந்த வாரிசுகளின் கால்பிடித்து இயங்கும் எடுபிடிகளுக்கும்  இது சரியாக படலாம்.   ஆனால், ஒரு தாயாக அம்மையாருக்கும், மகவுகளை  கொண்ட அவர்தம் எடுபிடிகளுக்கும்  புரியாமல் போனது எங்கனம்? 

ஆயிரக்கணக்கில் மக்கள் சாக காரணமான அன்டர்சனை    தப்பிக்கவைத்த குற்றத்துக்காக,  இன்று தந்தைக்காக தனையன் தூக்கு கயிற்றில் ஏறட்டும். அப்பொழுதாவது புத்திர சோகம் என்னவென்று புரியுதா பார்க்கலாம் இந்தப்பெண்மணிக்கு .  


நாளை ஒரு பொழுதிலே, ஆட்சிகள் மாறிய தருணத்திலே , இந்த மூவரும் குற்றமற்றவர்கள் என்று முழுமையாக நிரூபிக்கப்பட்டால், இழந்து போன உயிரை மீட்டு கொடுப்பார்களா? இல்லை பாலைவனமாகி போல இருபத்தியொரு வருடங்களையும் பின்னோக்கி நகர்த்துவார்களா? 


ஈழத்தமிழனாக  இந்த நொடியும் நம்புகிறேன்; ஆறுகோடி  தமிழர்களும் அந்த அப்பாவி உயிர்களை ஒரு போதும் தூக்கு கயிற்றுக்கு முன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று.. 

நான் என்ன செய்வேன்!  நாதியற்ற இனத்திலல்லவா பிறந்துவிட்டேன். ஆனால், "நான் நாமானால்"  நம்மால் முடியாதது  எதுவுமில்லை.

உறவுகளே  என்ன செய்யப்போகிறோம்!!!

8/26/2011

தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம்-மேலும் 4 மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் நியமனம்

 
டெல்லி: தமிழக ஆளுநராக சில மாதங்களுக்கு முன்பு வரை ஆந்திர மாநில முதல்வராக இருந்து வந்த கே. ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று பிறப்பித்தார்.

எஸ்.எஸ்.பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து புதிய ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம்

குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை இன்று மாலை வெளியிட்டது.

ஆந்திர முதல்வராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ரோசய்யா 2009ம் ஆண்டு

செப்டம்பர் 3ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். பின்னர் உள்கட்சிப் பூசல் காரணமாக

பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவரை சமாதானப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவியைக் கொடுக்கிறது காங்கிரஸ்.

கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக தீவிர அரசியலில் இருந்தவர் ரோசய்யா. என்.ஜி.ரங்காவின் சிஷ்யர் ஆவார்.

சென்னா ரெட்டி, அஞ்சய்யா, விஜயபாஸ்கர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, ராஜசேகர ரெட்டி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கியப் பதவிகளை

வகித்துள்ளார். 1979 முதல் 2009 வரை அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர்.

சாதனை அளவாக 16 முறை ஆந்திர பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் ரோசய்யா.

1998ம் ஆண்டு லோக்சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக இருந்துள்ளார். 1995ம் ஆண்டு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி

வகித்துள்ளார்.

தற்போது ரோசய்யா ஆந்திர மாநில மேல்சபையில், எம்.எல்.சியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவுக்கு எம்ஓஎச் பாரூக்

இதேபோல கேரள மாநில ஆளுநராக எம்.ஓ.எச் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கிறார்.

ஜார்க்கண்ட் ஆளுநராக டாக்டர் சையத் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

மிஸோரம் மாநில ஆளுநராக வக்கம் புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர ஆளுநர் சங்கரநாராயணன், கூடுதல் பொறுப்பாக கோவாவையும் பார்த்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச ஆளுநராக ராம் நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.