பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/29/2013

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு


சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள், 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் செப்., 5ம் தேதி, டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலும், தேசிய அளவிலும், விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2012க்கான தேசிய விருது, வரும், செப்., 5ம் தேதி, டில்லியில் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழகத்தில் இருந்து, 22 சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான இறுதி கட்டப்பணி, டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று நடந்தது.
இதில், தேர்வுக் குழுவின் சிறப்பு உறுப்பினராக, மைசூர் மண்டல கல்வி நிறுவன பேராசிரியர் ரமா மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், மத்திய இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மெட்ரிக் கல்வி இயக்குனர் வசுந்தரா, சென்னை மாநகராட்சி பள்ளிகள் இணை கமிஷனர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் குறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கூறியதாவது: ஏற்கனவே, விண்ணப்பங்களை பெற்று, தகுதியான ஆசிரியர்களின் பெயர் பட்டியலை இறுதி செய்து விட்டோம். இந்த பட்டியலை, பிற மாநில உறுப்பினர் பார்வையிட்டு, ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதற்காக, இந்த கூட்டம் நடந்தது.
தகுதி வாய்ந்த, 22 ஆசிரியர்களின் பட்டியல், கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு, செப்., 5ல், டில்லியில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, தேசிய ஆசிரியர் விருதை வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான விருதுக்கு, 350 பேர், தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தப் பணி, விரைவில் துவங்கி, ஆகஸ்ட்டில் முடிவடையும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tamil Nadu Text Books Online - Third Term Text Books for I to VIII Std

1/25/2013

மாநில மையம்


  1. THE NATIONAL VOTERS DAY
  2. இதழ் செய்தி 
  3. பிப்ரவரி 20-21 வேலைநிறுத்த நோட்டீஸ்
  4. 20.01.2013 மாநிலச் செயற்குழு முடிவுகள்
  5. தலைமை ஆசிரியருக்கான உண்டு உறைவிடப்பயிற்சி மாநில அளவில்
  6. பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு
  7. டிசம்பர் 2, மாநிலச்சிறப்புப்பொதுக்குழுமுடிவுகள்

மாநில மையம் - தபால்

1/23/2013

பள்ளி மாணவர்கள் பதிவு விபரங்கள் தலைமை ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு


பள்ளி மாணவர்கள் பதிவு விபரங்களை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் நேற்று மாலையில் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


நெல்லை மாவட்டத்தில் நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர் விபரம் சேகரிப்பது தொடர்பாக படிவங்கள் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது மாணவர் விபரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் வெப்சைட் வசதி இல்லை. வெளி மையங்களில பதிவு செய்ய ஒரு மாணவருக்கு 10 நிமிடமும், 15 ரூபாய் வரையிலும் செலவாகிறது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநில செயலாளர் முருசேன், மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சுடலைமணி, மாவட்ட பொருளாளர் ரமேஷ் மற்றும் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இப்பிரச்னை தொடர்பாக தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் முருகேசன், செயலாளர் வின்சென்ட், துணை செயலாளர் சாம் மாணிக்கராஜ், பொருளாளர் உமா சங்கர் மற்றும் நிர்வாகிகள் கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் தர்மராஜ் பிராங்களின், பொருளாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

மேலும், கடையம், சேரன்மகாதேவி, வள்ளியூர், களக்காடு ஆகிய சரகங்களில் உடனடியாக பொங்கல் போனஸ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்வு நேரத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு: "ஸ்மார்ட் கார்டு' பதிவேற்றும் பணியில் கணினி ஆசிரியர்கள்


மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தகவல்கள் பதிவேற்றும் பணியில், பள்ளி கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், தேர்வுநேரத்தில், மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், தேர்ச்சி 
விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்மார்ட் கார்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், பெற்றோர் பெயர், வருமானம், ரத்த வகை, சகோதர, சகோதரிகளின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இத்தகவல்களை, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளத்தில், பதிவேற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான, அரசு பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டு உள்ளது. அவை பல இடங்களில் செயல்படுவது இல்லை. மேலும், தேர்தல் நேரங்களில், வாக்காளர்களை கண்காணிக்க, பள்ளி மடிக்கணினிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அப்போது அவற்றின், செயலாக்க மென்பொருள் அழிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பின் அவைஅப்படியே பள்ளிகளுக்குஅனுப்பப்படுகின்றன. பல பள்ளிகளில் கணினி இருந்தாலும், இணைய வசதி இருப்பதுஇல்லை. கூடுதல் கட்டணத்தில், டேட்டாகார்டு மூலமாக, சில இடங்களில் இணைய வசதிகளை ஏற்படுத்தி பள்ளி சம்பந்தப்பட்ட பணிகளைமேற்கொள்கின்றனர். கணினி, இணையம் உள்ளிட்டவசதிகள் உள்ள, பள்ளிகளில் மின்தடை நேரங்களில், கணினியை பயன்படுத்த, இன்வெர்ட்டர் இல்லை. இந்நிலையில் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில், தனியார் இணைய மையங்களில், பள்ளியின் கணினி பணிகளை மேற்கொள்கின்றனர். தனியார் கல்லூரிகளில், பள்ளிகளில், இதுபோன்ற கணினி வசதி குறைபாட்டால், திருத்தணி மற்றும் பொன்னேரியில் உள்ள, தனியார் கல்லூரி வளாகங்களில், ஸ்மார்ட் கார்டு தகவல் பதிவேற்றும் பணி, பள்ளி கணினி ஆசிரியர்களை கொண்டு மேற்கொள்ள ப்படுகிறது. செய்முறை தேர்வு பாதிப்பு நேற்று முன்தினம் முதல், நடந்து வரும் இந்த பணியில், திருத்தணி கல்லூரியில் - 57 பள்ளி கணினி ஆசிரியர்களும், பொன்னேரி கல்லூரியில் - 83 பள்ளி கணினி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வரும் ஜன., 31ம் தேதிக்குள் பணியை முடிக்க உத்தரவு இடப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அடுத்த மாதம் (பிப்ரவரி) செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், கணினிஆசிரியர்கள், தகவல் பதிவேற்றும்
பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் மாணவர்களை, பொதுத் தேர்வுக்கு தயார் படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, பெயர் வெளியிடவிரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சில மாதங்களாக மாணவர்களின் ஜாதி சான்றிதழ், ஆசிரியர்கள் விவரம், விலையில்லா மடிக்கணினி போன்ற தகவல்கள், கணினியில் பதிவேற்றும் பணியை செய்தோம் என்றார். மேலும் தற்போது தேர்வு நேரத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, மாணவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்யும்பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.இதனால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியவில்லை. தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது. என்றார். வேறு வழி இல்லை இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டு குறித்த பதிவேற்றப் பணி, ஜன., 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை உத்தரவு இட்டு உள்ளது. அதன்படி, இப்பணிகள் நடந்து வருகிறன. தற்போது, இப்பணிகளை செய்யாவிட்டால், பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வு, மார்ச் மாதம் பொதுதேர்வு, விடைத்தாள் திருத்தும் பணி என, தொடர்ச்சியாக பணி உள்ளது. எனவே, ஒரு வாரத்திற்குள் இப்பணியை விரைந்து முடித்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சர்வர் பழுதால் பணி தாமதம் மாணவர்களின் தகவல்கள் பதிவேற்றும் பணி முழுவதும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளம் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் நாளொன்றுக்கு, 100 பேரின், குறிப்புகளை பதிவேற்றம் செய்யவேண்டும். ஆனால், சர்வர் அடிக்கடி பழுதாகி விடுவதால், பதிவேற்றும் பணி முற்றிலும்முடங்கியது. இதனால், ஒரு நாளுக்கு, 40 பேரின் விவரங்கள் தான் பதியமுடிகிறது. இதனால், வரும், 31ம் தேதிக்குள், பணி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது என, ஒரு கணினி ஆசிரியர் தெரிவித்தார்.

அகஇ - குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - விழிப்புணர்வு பேனர்கள்



Understanding Tax : Exemption and Deduction

Its the time for income tax calculations and we are faced with lot of tax jargons  Exemption and deduction are two common words some of us get confused with, and can’t differentiate between them. So, here is a simple explanation to figure out these terms.

Exemption: The word “exempt” means “free from an obligation or liability imposed”. For the income tax, “exemption” means the freedom from the obligation to pay the tax. When a particular income is not taxable at all, it need not be considered at all for the purpose of tax calculation. There are certain income that can be exempted from tax subjected to certain conditions.

For example the LTA is exempted from tax, provided certain conditions are met. Likewise house rent allowance is an exemption you get under Section 10(13a) of the Indian Income Tax Act.  

Deduction: The word “deduct” means “to subtract or take away for the total”. For the income tax goes, deductions means the amount subtracted from the totaltaxable income. The deductions are generally provided for certain saving and is a means by the government for encouraging investments that leads to national building.
lower your taxable income by that extent.

If your taxable income is Rs 5 lakh and you invest Rs 1 lakh in an instrument that offers deduction, your total taxable income reduces to Rs 4 lakh. So if your tax liability is, say, 10 percent of your taxable income, after accounting for deduction, you will pay Rs 10,000 less in income-tax. The benefits depends on the tax slab you are into. 

For an example for the Home Loans, Interest can be claimed as a deduction under Section 24. The benefit is Rs. 150,000 or the actual interest repaid whichever is lower. Principal component can be exempted up to the maximum of Rs. 100,000 under Section 80C. 

தேர்வு கால அட்டவணை

12/29/2012

G..O.242 dated 18.12.2012

பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

12/15/2012

வருந்துகிறேன்

என்னுடைய இணையத்தள இணைப்பு இதுவரை சரிசெய்யாததால் என்னால் தொடர்ச்சியாக பதிவிட இயலவில்லை. வருந்துகிறேன்

12/06/2012

Student-Teacher Ratio – Ministry of HRD


The Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009 has become operative with effect from 1st April, 2010, and the Sarva Shiksha Abhiyan (SSA) norms have been revised to conform to the Student-Teacher Ratio (STR) prescribed in the Schedule to the RTE Act. The revised norms are as under:
For classes I to V:
(i) Two teachers for up to sixty admitted children
(ii) Three teachers for 61-90 children
(iii) Four teachers for 91-120 children
(iv) Five teachers for 121-200 children
(v) One Head Teacher, other than the five teachers, if the number of admitted children exceeds 150; and the STR (excluding Head Teacher) shall not exceed forty if the number of admitted children is above 200.
For Classes VI to VIII:
(i) At least one teacher per class so that there will be at least one teacher each for (a) Science and Mathematics; (b) Social Studies; and (c) Languages.
(ii) At least one teacher for every 35 children;
(iii) Where admission of children is above 100, there whill be (a) a full time head-teacher and (b) part time instructors for Art Education, Health & Physical Education and Work Education.
 To improve the STR, 19.82 lakh teacher posts have been sanctioned up to 2012-13, against which 12.48 lakh teachers have been recruited till 30.09.2012 by the States/UTs. The States/UTs have been advised to fill up these teacher posts along with teacher vacancies under the State sector. They have also been advised to rationalize the deployment of teachers in order to make the schools RTE complaint.
 This information was given by the Minister of State for Human Resource Development, Dr. Shashi Tharoor in Lok Sabha today.

TRB - TNTET - OCT 2012 - PAPER - I & II FINAL SELECTION LIST & RESULTS RELEASED

12/05/2012

புதிதாக தேர்வான 18,000 ஆசிரியர்களுக்கு 13ல் பணி நியமனம்


சென்னை: கடந்த ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர், பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18,382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். 13ம் தேதி, இவர்களுக்கான பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பட்டதாரிஆசிரியர் தேர்வும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர்என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது. பின், சென்னைஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒருதகுதித் தேர்வே; அதில், தேர்ச்சி பெறுபவர்களை, பணி நியமனம்செய்வதற்கு, தனி வழிமுறைகளை உருவாக்கி, அமல்படுத்தவேண்டும்" என உத்தரவிடப்பட்டது.
இதனால், இறுதிப்பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போனது.அமைச்சர் தலைமையிலான குழு, புதியவிதிமுறைகளை உருவாக்கியதும், அதை அமல்படுத்த, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., - ஆசிரியர் பட்டயப் பயிற்சி என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி, "வெயிட்டேஜ்" மதிப்பெண்நிர்ணயித்து, அதன் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, நீண்ட நாட்களாக நடந்துவந்தது.
பணிகள் முடிந்ததை அடுத்து, இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதில், 18ஆயிரத்து, 382 பேர், இடம் பிடித்தனர். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்; பட்டதாரி ஆசிரியர்பணிக்கு, 8,718 பேரும், தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும்,குறிப்பிட்ட சில இன சுழற்சிப் பிரிவுகளில், தகுதியானவர்கள் கிடைக்காததால், 961 பேரை தேர்வு செய்யமுடியவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், இன்று மாலைக்குள் வெளியிடப்பட உள்ளது. தேர்வு பெற்றவர்கள், பாடப்பிரிவைதேர்வு செய்து, பதிவு எண்களைபதிவு செய்தால், இறுதி தேர்வுப் பட்டியலில், இடம் பெற்றுள்ளோமாஎன்பதை அறியலாம்.
அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை,விமரிசையாக நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அமாவாசை நாளான, 13ம் தேதி, விழாநடக்கும் எனவும், அதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணி நியமனஉத்தரவுகளை வழங்குவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதிப் பட்டியல் வெளியான உடன், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து, "ஆன்-லைன்" வழியாக, கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும்விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில், விழாவை நடத்தி, பணி நியமன உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால்,அதிகாரிகள் மின்னல் வேகத்தில், அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர்.
இதனிடையே, இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்பட வேண்டும்;ஆனால், 9,664 பேர், தேர்வு பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து 432 பேர் தேவை; ஆனால், 8,718பேர் மட்டுமே, இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து, 714 இடங்களுக்கு,தகுதியானவர்கள் கிடைக்கவில்லை.
பல லட்சம் பேர் தேர்வு எழுதிய போதிலும், டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்காததால்,இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

TNPTF மாவட்டப் பொதுக்குழு மற்றும் பயிற்சி பட்டறை புகைப்படங்கள்

11/29/2012

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நாளை உலக படிக்கும் நாள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நாளை உலக படிக்கும் நாள்
கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நாளில்
பாடத்தை தவிர்த்து பொது அறிவு நூல்கள், பத்திரிக்கைகள், முக்கிய அரசியல்
கட்சி தலைவர்கள் குறித்த பாடங்களை படிக்க செய்ய வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வேல்டு டே நவம்பர் மாதம் 30ம் தேதி
கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் உலக
வேல்டு டே இதுவரை கொண்டாடியதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. உலக
படிக்கும் நாள் (வேல்டு ரீடிங் டே) தமிழகத்தில் இந்த ஆண்டு நாளை கொண்டாட
கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி
அதிகாரிகள் ஆகியோருக்கு கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நாளை (30ம் தேதி) உலக படிக்கும் நாள் பள்ளிகளில் கண்டிப்பாக கொண்டாட
வேண்டும். இதன்படி நாளை அனைத்து பள்ளிகளிலும் பாடங்களை தவிர பொது அறிவு
நூல்கள், கலை, இலக்கியம் சம்பந்தமான புத்தகங்கள், அறிவியல், கம்ப்யூட்டர்
சம்பந்தமான புத்தகங்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பற்றிய
விபரங்கள், பழைய வரலாறுகள் உள்ளிட்ட தகவல் அடங்கிய புத்தகங்களை மாணவ,
மாணவிகள் வாசிக்க செய்ய வேண்டும். அதோடு நாளைய தமிழ் மற்றும் ஆங்கில தினசரி
பேப்பர்களை படிக்க செய்ய வேண்டும். கண்டிப்பாக பாடம் அல்லாத புத்தகங்களை
மாணவ, மாணவிகளை கண்டிப்பாக வாசிக்க செய்து உலக படிக்கும் நாளை கல்வித்துறை
அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வேல்டு ரீடிங் டே
குறித்த விபரத்தை முதன்மை கல்வி அதிகாரி ராமச்சந்திரன் தெரிவித்து
பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் அல்லாத பொது அறிவு நூல்கள் உள்ளிட்ட
புத்தகங்களை வாசிக்க செய்ய வேண்டும். இது சம்பந்தமான நடந்த நிகழ்ச்சியை
போட்டோவுடன் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (1ம் தேதி) அனைத்து
பள்ளிகளிலும் எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாட வேண்டும் என்றும், எய்ட்ஸ்
நோய் சம்பந்தப்பட்ட தகவல்கள், அந்த நோய் எப்படி வருகிறது, அந்த நோயாளிகளை
சமுதாயத்தில் எப்படி பார்த்து கொள்ள வேண்டும். சிகிச்சை முறைகள் உள்ளிட்ட
விபரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு
உத்தரவிட்டுள்ளது.
இதனால் நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகளிலும்
பாடத்தை தவிர்த்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு
ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் முதல் முதலாக கல்வித்துறை சார்பில் நாளை
தான் உலக படிக்கும் நாள் கொண்டாடப்படுவதாகவும், இதற்கு முன்னர் இதுபோன்று
கொண்டாட வில்லை என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்பருவ கல்வி முறை திட்டம் : டிச., 7ம் தேதி கடைசி நாள்

முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிச., 7 கடைசி நாளாகும். இதுகுறித்து, மாநில பொதுபள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட அறிக்கை: மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப் புத்தகங்களின், இரண்டு நகல்களை, "உறுப்பினர் - செயலர் மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பாடப் புத்தகங்கள், மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80 ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும், சிடிபி பிரின்டிங்கிலும், 200 ஜி.எஸ்.எம்., வர்ஜின் கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். வரைவு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது. 7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Dearness Allowance from January 2013 for Central Government Employees and Pensioners


Dearness Allowance for Central Government employees will be estimated twice in a year based on the movements in the AICPI for Industrial workers. The Fifth Central Pay Commission had adopted the AICPI (IW) using the 1982 series for estimation of DA. The Government has developed a new series with base 2001, with effect from January 2006. It is possible to generate the back data series with base 2001, with the help of the stipulated linking factor of 4.63. The 2001 series has an extended coverage of 78 centers compared to the 70 centers in the 1982 series. The Commission, therefore, recommends that the AICPI (IW) with base 2001 may, henceforth, be used for the purpose of calculating DA till it gets revised. The base year should be revised as frequently as feasible. So with the base of 2001=100 the AICPI Number for Industrial Workers has been arrived every month.
So the past twelve months (starting from January 2012 to December 2012) AICPIN –IW average has to be worked out to find the Rate of Dearness Allowance to be paid from January 2013 to the Central government employees using the following formula
Dearness Allowance with effect from January 2013 = (Average of AICPI-IW for the last 12 months( from
Jan 2012 to Dec 2012) – 115.76)X100/115.76
AICPIN – IW  from January 2012 released by Labour Bureau ,Government  of  India
Month & YearAICPI Number for Industrial Workers
January 2012198
February 2012199
March  2012201
April 2012205
May 2012206
June 2012208
July 2012212
August 2012214
September 2012215
October 2012To be released
November 2012To be released
December 2012To be released

     We can assume with the above data that the AICPI Number for Industrial Workers for the remaining three months will be around 215 only, as there is no any abnormal fluctuation in AICPI for the last three months .

If it is so, the expected Dearness Allowance likely to be paid with effect from January 2013 will be 80%

Private Schools Fee Determination Committee


Fee fixed for the year 2012-2015 - Court cases - Part II -District wise Particulars

Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.

COMMON SYLLABUS

11/26/2012

சிவகங்கையில் மாவட்ட பொதுக்குழு மற்றும் கருத்தரங்கம்


தலைமை: ஆ.முத்துப்பாண்டியன் மாவட்டத்தலைவர்

முன்னிலை: திரு.ஜோசப் ரொஸ், மாநிலத்துணைத்தலைவர்
                            திரு. க.பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர்

வரவேற்புரை: ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டச்செயலாளர்

வாழ்த்துரை: திரு.முத்துச்சாமி, முன்னாள் மாவட்டச்செயலாளர்
                         திரு.வெ.நீலமேகம், முன்னாள் மாநிலத்துனைத்தலைவர்

நன்றியுரை: சிங்கராயர், மாவட்டப்பொருளாளர்

சிறப்புரை:  சங்க வரலாறு - திரு.கண்ணன், மாநிலத்தலைவர்

           எதிர்காலச்சவால்கள் -திரு.முருக.செல்வராசன்,   மாநிலப்பொதுச்செயலாளர்.

பங்கேற்ற அனைவருக்கும் மாவட்டக்கிளையின் சார்பாக நன்றி