அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. உத்தரவு வெளியான சில நாட்களில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. எனவே, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே பணி நியமனம் தர முடியும்.
மாநில அளவில், தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பட்டியல், கடந்த சனி, ஞாயிறுகளில் (இரவோடு இரவாக) மாவட்ட தொடக்க, முதன்மை கல்வி அலுவலகங்களில் தயாரிக்கப்பட்டது. நேரடியாக அலுவலக ஊழியர் மூலம், இப்பட்டியல் இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.ஒரு ஆசிரியர் பணியிடத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் வரை அரசியல்வாதிகள் சிலர் வசூலில் இறங்கியுள்ளனர். இதுதவிர, பள்ளிகள் பெயரிலும் பல லட்ச ரூபாய் வரை வசூல் நடக்கிறது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பம் வரவேற்பு, நேர்முக தேர்வு நடத்த வேண்டும்.
இவையெல்லாம் இப்போது நடத்த வாய்ப்பில்லை.இது குறித்து தனியார் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவில் ஆசிரியர்களாக பணிபுரிவோர் கூறுகையில், "வசதியானவர்கள் பணம் தந்து ஆசிரியர் பணியிடத்தை பிடித்து விடுவர். சுயஉதவி பிரிவில் மாதம் 3,000 மற்றும் 4,000 ரூபாய்க்கு பல ஆண்டாக வேலை பார்க்கும் நாங்கள், இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது? இதை தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும்' என்றனர்.
Source: Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக