டெல்லி: மாதச் சம்பளம் வாங்குவோருக்கு ஒரு நிம்மதிச் செய்தியை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். அது, இனிமேல் அவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யத் தேவையில்லை என்பது.
தற்போது மாதச்சம்பளம் வாங்குவோர் உள்பட வருமான வரி கட்டுவோர் அனைவருமே வருமான வரி கட்டியது தொடர்பான ரிட்டர்னை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது இதிலிருந்து மாதச் சம்பளதாரர்களுக்கு விலக்கு அளிக்கிறது நிதியமைச்சகம்.
அதன்படி இனிமேல் மாதச் சம்பளம் வாங்குவோர் ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தேவையில்லை. அவர்களுக்கான வரியை, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமே பிடித்துக் கொடுத்து விடுவதால் இந்த விதி விலக்கு அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், தற்போது டிடிஎஸ் ஆவணங்களை இ-பைலிங் மூலம் தாக்கல் செய்வது நிலைப்புத்தன்மையைப் பெற்று விட்டது. என��ே விரைவில் மாதச் சம்பளதாரர்கள், தனியாக ஐடி ரிட்டர்னைத் தாக்கல் செய்யத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிடும் என்றார் முகர்ஜி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக