நர்சரி மழலையர் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நர்சரி மற்றும் மழலையர் துவக்கப் பள்ளி நிர்வாகிகள் கூட்டம் துவக்க கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் நடைபெற்றது. நர்சரி பள்ளிகளின் அலுவலர் திரவியம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலர் கூட்டத்தில கலந்து கொண்டனர்.
துவக்க கல்வியில் மாணவர்களுக்கு கட்டாய கல்வி வழங்குவது பற்றிய அரசின் உத்தரவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது துவக்க கல்வி அலுவலர் ஞானகவுரி பேசியதாவது:-
மழலையர் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது எவ்வித பரிசீலனைக்கும் இடமளிக்கக் கூடாது. மாணவர்களின் பெற்றோர் படித்தவரா, பணியாற்றுபவரா என்றோ, மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோருக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது கூடாது.
மாணவர்கள் சேர்க்கையின் போது 25 சதவீதம் பேருக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும். மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடைநீக்கம் செய்யக் கூடாது. எந்த வகுப்பிலும் இடையில் வரும் மாணவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களிடம் கல்விச் சான்றிதழ் இல்லாத நிலையில் அவர்களின் வயதுச் சான்றிதழின் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு தகுந்த வகுப்பில் சேர்க்க வேண்டும். மேலும் அங்கீகாரம் பெறாமல் மழலையர் பள்ளிகளை நடத்தக் கூடாது.
நன்றி: மதுரை போஸ்ட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக