பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள விவேகானந்தா பல்கலைக்கழக ஊனமுற்றோர் மேலாண்மை மற்றும் சிறப்புக் கல்வியியல் புலத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்கக்கூடிய சிறப்பு ஆசிரியர்களுக்காக நடக்கவுள்ள சிஆர்இ (தொடர் மறுவாழ்வுக் கல்வி) பயிலரங்கில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென பணியாற்றும் அனைத்து சிறப்பு ஆசிரியர்கள், வல்லுநர்கள் இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற அதிகார அமைப்பான இந்திய மறுவாழ்வுக் கழகத்தில் பதிவு செய்து பதிவெண் பெற்றிருக்க வேண்டும். இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
அதற்கு இக்கழகம் நடத்தும் இதுபோன்ற பயிலரங்குகளில் பங்கேற்று 100 புள்ளிகளைப் பெற வேண்டும்.
இல்லையெனில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிடுவர். இதுபோன்ற பயிலரங்கு வரும் 22 ம் தேதிமுதல் 26 ம் தேதி வரை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள விவேகானந்தா பல்கலைக்கழத்தில் நடக்கிறது.
"சிறப்புக் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி' என்ற தலைப்பில் நடக்கும் இந்தப் பயிலரங்கில் அமர்வுகள், செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோர், 0422-269 7529,269 8553 என்ற தொலைபேசி எண்களில், விரிவுரையாளர் சுதாவை தொடர்பு கொள்ளலாம்நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக