சிவகாசி: சிவகாசியில் தயாராகும் பாடப்புத்தகங்கள் விபரங்களை தினமும் அரசுக்கு அறிக்கை வழங்க வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை அச்சிடும் பணி சிவகாசி, சென்னை அச்சகங்களில் நடந்து வருகிறது. சிவகாசியில் 21 அச்சகங்களில் பத்தாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
சிவகாசியி்ல் அச்சிடப்படும் பாட புத்தக விபரங்களை அரசுக்கு தினமும் அறிக்கை அனுப்ப வருவாய்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எத்தனை ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்ற விபரத்தை அனுப்ப கூறியுள்ளனர்.அதன்படி வருவாய் அலுவலர்கள் ஒவ்வொரு அச்சகத்திலும் விபரம் சேகரிக்கின்றனர்.
தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள் அச்சிடும் பணியை கண்காணித்த நிலையில் கோர்ட் உத்தரவுக்கு ஏற்ப பாட புத்தகங்களை பள்ளிக்கு விரைவாக வழங்க வேண்டும் என்பதற்காக வருவாய் துறை அலுவலர்களையும் இப்பணியில் அரசு ஈடுபடுத்தியுள்ளது.
சமச்சீர் பாடப்புத்தகங்கள் தரமானதாக இல்லை என்பதால் பழைய பாடதிட்டப்படி வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்தது. இநத பிரச்சனை கோர்ட்க்கு சென்றதால் கோர்ட் வழிகாட்டுதலில் கல்வியாளர்கள் தரும் அறிக்கையின்படி மூன்று வாரத்திற்கு பின் தீர்ப்பு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக