First Published : 25 Jun 2011 11:53:13 AM IST
சிங்கம்புணரி, ஜூன் 24: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம் காட்ட வேண்டுமென, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, அதன் வட்டாரச் செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை: சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளதை வரவேற்கிறோம். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கிராமக் கல்விக்குழு, பெற்றோர்- ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வுக் கூட்டங்களையும், தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணியும் நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒன்றியத்தில், அதிக மாணவர்களை சேர்க்கும் பள்ளியைத் தேர்ந்தெடுத்து பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள சிறப்பு இணைப்பு பயிற்சிகளும், கணிணி வழிக் கற்றலும் மாணவர் சேர்க்கையை உயர்த்திட வழிவகுக்கும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக