புதுடில்லி : வருமான வரி கட்டாமல் ஏய்ப்பவர்களுக்கு எதிராக, கைது நடவடிக்கையை மேற்கொள்ள வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர் தீவிர போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால், ஆடிப்போய் உள்ள மத்திய அரசு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கறுப்பு பணத்தை வைத்திருப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் போன்ற சதிச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறையின் கீழ் சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய குற்றப் புலனாய்வு பிரிவு துவக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, வருமான வரி கட்டாமல் ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய, தனது அதிகார எல்லையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது வருமான வரித்துறை. செலுத்தப்படாமல் இருக்கும் வருமான வரி பாக்கி மட்டும் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.இதில், பெரும் பகுதியை வசூல் செய்வதில், வரி வசூலிப்பாளர்களுக்கு தலையாய பிரச்னையாக உள்ளது. தற்போது, இதை மீட்பதற்காக வருமான வரித் துறையில் வரி மீட்பு அதிகாரி (டி.ஆர்.ஓ.,) உள்ளார். இவர், வரி கட்டாத நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரம் பல ஆண்டுகளாக இருந்தாலும், வருமான வரித்துறையில் பின்பற்றப்பட்ட மென்மையான அணுகுமுறை காரணமாக உறுதியாக பின்பற்றப்படவில்லை. மேலும், வரி நிலுவை பிரச்னை, பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் வந்ததால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டதன் மூலம், வரி மீட்பு அதிகாரிக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வரி கட்டாத நபரை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், சொத்துகளை ஜப்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி கட்டாத நபரின் அசையும், அசையாத சொத்துகளை கைப்பற்றி அவற்றின் வரியை ஈடுகட்டுவதற்காக ரிசீவரை நியமிக்கவும் அதிகாரம் அளிக்கும் வகையில், வருமான வரிச் சட்டம் பிரிவு 222 கீழ் வழி வகை செய்யப்பட்டுள்ளது.வருமான வரித் துறையில் தற்போதுள்ள டி.ஆர்.ஓ., பதவி என்பது அதிகாரம் இருந்தும், அதிகாரத்தை பயன்படுத்த முடியாத பதவியாக இருந்து வந்தது. இப்போது, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலுவையில் உள்ள வருமான வரி விரைந்து மீட்கப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக