காரிமங்கலம்: காரிமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். காரிமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் வாசுதேவன் (37). முருக்கம்பட்டி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் குமார். இவர் பி.எட்., தற்போது முடித்துள்ளார். இதால், ஊதிய உயர்வுக்கான ஆவணங்களை தயார் செய்ய வாசுதேவனை அணுகியுள்ளார்.
வாசுதேவன், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த குமார் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் ஆலோசனையின் படி நேற்று மாலை குமார், காரிமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்று வாசுதேவனிடம், 1,000 ரூபாய் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., நாச்சியப்பன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் குழுவினர் வாசுதேவனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக