பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/09/2011

ஒன்றரை மாதமாக பாடப் புத்தகங்கள் இல்லாத மாணவர்கள்: ப.சிதம்பரம் வருத்தம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக மாணவ-மாணவிகளிடம் பாடப் புத்தகங்கள் இல்லாதது வருத்தம் தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

தமிழ்நாடு ஆரம்பக் கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில், குழந்தைகளின் கல்வி உரிமை மாநில மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் ப.சிதம்பரம்,

தமிழ்நாட்டில் கல்வியின் முக்கியத்துவத்தை அனைத்து கட்சிகளும் புரிந்து வைத்துள்ளன. ஒவ்வொரு கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அடிப்படையில் தரமான கல்வி வேண்டும் என்பதைத்தான் முக்கியமாக கருதுகிறார்கள்.

ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் வறுமை, வன்முறை அடிக்கடி நிகழ்வதற்கு காரணம் அங்கு போதிய கல்வி வாய்ப்பு இல்லை. 20 கி.மீ. தூரத்திற்கு பல ஊர்களில் பள்ளி கிடையாது.

ஆனால், தமிழ்நாட்டில் ஆரம்ப கல்வி எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆரம்ப கல்விப் பணி அதோடு முடிந்து விடுவதில்லை. ஆரம்ப கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனது காலத்தில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை இருந்தது. இன்று எனது பேத்தி காலத்தில் 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. அடுத்த தலைமுறையில் ஒரு ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என்ற நிலை வந்து விடக்கூடாது. எனவே இது கல்வியின் வளர்ச்சி அல்ல, அது குறைவதாகவே கருத வேண்டும்.

மேலை நாடுகளில் ஒரு ஆசிரியருக்கு 25 மாணவர்கள் என்ற நிலை உள்ளது. எனவே 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்காததற்கு ஆசிரியர் பற்றாக்குறை காரணம் அல்ல.ஆசிரியர்களும் உள்ளனர், மாணவர்களும் உள்ளனர். இரண்டுக்கும் உள்ள இடைவெளி என்னவென்றால், பணம் இருக்கிறது மனம் இல்லை எனறுதான் பொருள்.

ஒவ்வொரு குழந்தைகளும் கட்டாயம் 10வது வகுப்பு வரையாவது படிக்க வேண்டும். அதற்காகத்தான் இலவச கட்டாய கல்வியும் வந்துள்ளது. ஆசிரியர்களை அலுவலக பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அதை நான் வரவேற்கிறேன்.

ஆனால் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். கணக்கே தெரியாத மற்றவர்கள் கையில் கணக்கெடுப்பு பணியை கொடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி சர்ச்சைப் பொருளாக மாறியுள்ளது. வழக்கு கோர்ட்டில் நடக்கிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக மாணவர்களிடம் பாடப் புத்தகங்கள் இல்லாதது வருத்தத்தை தருகிறது. நாளை மறுநாள் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள், தந்தால் மகிழ்ச்சி.

கடந்த 31.3.2011 வரை ரூ.43,000 ஆயிரம் கோடியை மாணவர்களுக்குக் கல்விக் கடனாக தந்துள்ளோம். வரும் ஆண்டுகளில் ரூ.60,000 கோடி, ரூ.1 லட்சம் கோடியாக கல்விக் கடன் உயரும். கல்விக் கடன் திருப்பி செலுத்தப்படுவதை 7 ஆண்டுக்கு பதில் 15 ஆண்டுகளாக அறிவிக்கலாமா என்று நிதியமைச்சர் ஆலோசித்து வருவதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக