விக்கிரமசிங்கபுரம்: "ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-"கடந்த 1988ம் ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாணை எண்.207 பள்ளி கல்வித்துறை நாள் 30-9-2008 மற்றும் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் சென்னை ந.க.எண்.2200/2010 நாள் 5-10-2010 செயல்முறைகளின்படி 1-6-1988க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்கி ஊதியம் நிர்ணயம் செய்து திருந்திய ஓய்வூதிய பலன்கள் மட்டும் பெற அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.மேற்படி அரசாணைகளின்படி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு முறையாக விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஆனால் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்களுக்கு உரிய ஊதிய திருத்தம் செய்யாமலும், ஓய்வூதிய பலன்களை அனுமதிக்காமலும் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் வயது முதிர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் உரிய ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்களுக்கு உரிய பணப்பலன்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக