ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 28: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஆர்.கண்ணன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ப.ராமசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் வைரமுத்து, சி.கருப்பசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கோரிக்கைகள்: சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைந்துவிட்டு, நடப்பு ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நீக்கி, மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, தமிழக அரசும் வழங்க வேண்டும். பதவி உயர்வுக்கு பணி நியமன நாள் முதல் கணக்கிட்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 400-யை திருத்த வேண்டும். பொது மாறுதலை உடனே நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20 ஆசிரியைகள் உள்பட 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக