சிங்கம்புணரி, ஜூலை 28: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் தாமஸ் தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சுதர்சன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும், தன்பங்கேற்பு ஊதியத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், உதயகுமார், தலைமையாசிரியர்கள் ஜேம்ஸ், பாலசுப்பிரமணி, ரோகிணி, ஜெயபாரதி, வி.சி.சண்முகம், ராமதிலகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.வட்டார பொருளாளர் தீபபிரபு நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக