கோவை, ஜூலை 2: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான விண்ணப்பம் பெறுவதற்கான தேதி ஜூலை 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2011-2012 கல்வியாண்டில், விவசாயிகளுக்கான பி.எஃப்.டெக். மற்றும் எம்.பி.ஏ. எம்.எஸ்சி. (சுற்றுச்சூழல் மேலாண்மை) மற்றும் எம்.எஸ்சி. (கரும்பு உற்பத்தி மேலாண்மை) மற்றும் முதுநிலை பட்டயப் படிப்பில் உணவு உயிர் தொழில்நுட்பம், உயிர் தகவலியல், மூலிகைப் பயிர்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதிக்காத பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், தாவர நலக் கண்காணிப்பு, உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல் மற்றும் இடுபொருள் விற்பனை ஆகிய பாடங்களில் சேர்வதற்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற ஜூன் 30-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற ஜூலை 22-ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை -641003. தொலைபேசி எண்கள்: 0422-6611229, 9442111048, 9442111057, 9442111058.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக