மன்னார்குடி: கல்லூரியில் ஆசிரியர் செருப்பால் அடித்ததால், அவமானம் தாங்க முடியாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மன்னார்குடி அடுத்த இடையர்நத்தத்தில் ஏ.ஆர்.ஜே.பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இன்ஜினியரிங் (இ.இ.இ) இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராஜா (19),சிவபாலன் (19), சரண்ராஜ் (19). கடந்து 3 நாட்களுக்கு முன், இம்மூவரையும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் குலஞ்சிராஜா (32) சக மாணவர்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பால் அடித்துள்ளார்.
இதில் அவமானம் தாங்க முடியாத மூவரும், வீடுகளுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், ஆபத்தான நிலையை எட்டிய ராஜா இறந்தார். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்ததால், உயிர் பிழைத்தனர். இதையறிந்த கல்லூரி மாணவர்கள் மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகனிடம் கல்லூரி மாணவன் ராஜாவின் இறப்பு குறித்து விசாரணை கோரி மனு அளிதனர்.
ஆனால், போலீசார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீர் சாலை மறியலி்ல் ஈடுபட்டனர். கல்லூரி பஸ்ஸையும் அடித்து நொறுக்கினர்.
மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகன், இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார் சிங், சிவஞானவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவர்கள் சமாதானம் ஆகவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கலெக்டர், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக