தர்மபுரி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா, தேர்வுக் குழு செயலர் ஷீலா கிரேஸ் ஜீவமணி ஆகிய இருவரும் ஆகஸ்ட் 22 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னகரம் தாலுகா, செல்லமுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பிளஸ் 2 தேர்வில், 1151 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், இவருக்கு, மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங்குக்கு கடிதம் அனுப்பப்படவில்லை.
ஆனால், இவரை விட குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இதனால் தன்னை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கக் கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் மாணவர் சதீஷ்குமார் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான வரிசை அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சதீஷ்குமாரை சேர்க்க உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை மருத்துவக் கல்வி இயக்குனர், தேர்வுக் குழு செயலாளர் செயல்படுத்தவில்லை.
இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா, தேர்வுக் குழு செயலாளர் ஷீலா கிரேஸ் ஜீவமணிக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரணைக்கு வந்த போது, ஆகஸ்ட் 22ம் தேதி வம்சதாரா, ஷீலா கிரேஸ் ஜீவமணி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக