பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/19/2011

ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வி சார்ந்த பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 27ம் தேதி சமச்சீர் கல்வி சார்ந்த செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி பயிற்சி கருத்தரங்கு நடக்க உள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பகவதி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை கற்றல் கல்வி, எளிய படைப்பாற்றல் கல்வி, படைப்பாற்றல் கல்வி முறையினை சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் சார்ந்து நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பயிற்சியினை ஆசிரியர்களுக்கு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியுமான பகவதி தலைமை வகித்தார். அவர் பேசியதாவது; கடந்த 13ம் தேதி வழங்க திட்டமிட்டு தள்ளி வைக்கப்பட்ட சிம்பிளி இங்கிலீஷ் டி.வி.டி பயறிசி (பேச் 2) வரும் 20ம் தேதி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சியில் வழங்க வேண்டும்.பல் மற்றும் கண்பாதுகாப்பு பயிற்சி குறுவள மைய பயிற்சியாக வரும் 20 மற்றும் 27ம் தேதி ஆகிய நாட்களில் உயர் தொடக்க மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்ட பயிற்சி தள்ளி வைக்கப்படுகிறது.
இதற்கான பயிற்சி தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.வரும் 27ம் தேதி அன்று தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி பணிமனையாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிமனையில் சமச்சீர் கல்வி சார்ந்து செயல்வழிக்கற்றல், எளிய படைப்பாற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையில் கற்பிக்க ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும்.இவ்வாறு பகவதி தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 13 மேற்பார்வையாளர்கள் தகவல் ஆவண அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

பல்லாவரம் அரசு பள்ளியில் கண் பார்வையற்ற ஆசிரியர் ஒருவர், தாம் எடுக்கும் பாடத்தில், மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய வைத்து சாதனை செய்து வருகிறார்.
பல்லாவரம் மறைமலையடிகளார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கோவில் பிள்ளை, 52. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரிடம் பயிலும் 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள், இதுவரை தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி அடைந்து வருகின்றனர். இவரிடம் அன்பாகவும் நடந்து கொள்கின்றனர்.
குறைபாடற்ற ஆசிரியர்களையே கிண்டலடித்து, கீழ்படியாமல் போகும் மாணவர்கள் மத்தியில் இது எப்படி சாத்தியமானது? திருநெல்வேலி யாக்கோபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கோவில்பிள்ளை. பார்வையற்ற பிள்ளை என்பதால், அனைவரிடமும் செல்லம் அதிகம். எட்டாம் வகுப்பு வரை மற்ற பிள்ளைகளைப் போலவே பள்ளி சென்று, அங்கு வாய்மொழி கல்வி மட்டும் கற்றிருக்கிறார்.
"படித்து என்ன செய்யப் போகிறோம், வீட்டில் தான் நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்களே" என்கிற எண்ணம் வர படிப்புக்கு, குட்பை சொல்லிவிட்டு, பாய் முடையவும், பிளாஸ்டிக் ஒயர்களில் நாற்காலிகள் பின்னவும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில வருடங்கள் கழித்து படிப்பு தான் முக்கியம் எனப்பட, மார்த்தாண்டம் அருகில் ஐரேனிபுரத்திலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில், ஏழாம் வகுப்பு சேர்ந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட பள்ளிப் படிப்பு முடிக்கவேண்டிய வயதில், கோவில்பிள்ளையின் கல்வி பயணம் மறுபடியும் தொடர்ந்தது. அதற்கடுத்து கல்வியின் ருசி பிடித்துப்போய் விட, ஒன்பதாம் வகுப்பை பூந்தமல்லியிலும், கல்லூரிப்படிப்பை மாநிலக் கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவரது தற்போதைய கல்வித்
தகுதி எம்.ஏ., எம்.எட்., ராமேசுவரத்தில் தன் ஆசிரியப் பணியை துவக்கிய கோவில்பிள்ளை, அதன் பின் கல்பாக்கம் கூவத்தூரிலும் தற்போது பல்லாவரத்திலுமாக 17 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார்.
மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு முன், தன் கதையை முதல் பாடமாக எடுத்து வைக்கிறார். "ஏழைக்குடும்பத்தில், பார்வையில்லாமல் பிறந்து, முறையற்ற வயதில் கல்வி கற்ற நானே ஆசிரியராக, உயர முடியுமென்றால், எந்த அங்கஹீனமும் இல்லாமல், தன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணும் பெற்றோருக்கு குழந்தையாய்ப் பிறந்து, சரியான வயதில் கல்வி கற்கும் உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும்?" எனக் கேட்டவுடன், ஒவ்வொரு மாணவ இதயமும் முறுக்கேறிக் கொள்கிறது.
இத்தோடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் கோயில் பிள்ளை. இதற்கான தேவைகளை நன்கொடைகள் மூலமாக சமாளிக்கின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளும், பெற்றோரை இழந்த குழந்தைகளுமாக 15 பேர் உள்ளனர். இதை நிர்வகித்து வருபவர் கோவில்பிள்ளையின் மனைவி நவமணி. இவர் எம்.ஏ., பி.எட்., பட்டதாரியும் கூட. கோயில்பிள்ளையின் மாணவியாயிருந்து, பின் அவர்பால் ஈர்க்கப்பட்டு, குடும்பத்தை எதிர்த்து அவரது மனைவியானவர். இத்தம்பதிக்கு பிளஸிங் (10), பிளஸி ஜெபராணி (7) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
"எல்லா மாணவர்களுக்கும் அரசு புத்தகம் கொடுக்கும் போது, கண் பார்வையற்ற மாணவர்களுக்கும் பிரெய்லி புத்தகங்களை வழங்கினால், அவர்களாகவே, படித்துக் கொள்வார்கள்தானே?" என்று எதார்த்தமாக கேட்ட கோயில்பிள்ளையின் வார்த்தைகளில் ஆதங்கம் எதிரொலித்தது.
கோயில் பிள்ளையின் மனைவி நவமணி அவருக்கு மனைவியாக மட்டும் சேவை செய்யவில்லை. ஒரு தாயாகவும், வழிகாட்டியாகவும், பாடங்களை படித்துக்காட்டும் ஆசிரியராகவும் விளங்குகின்றார். நவமணி ஒருமுறை பாடங்களைப் படித்துக் காட்ட அவற்றை மனனம் செய்து விட்டு, பின் மாணவர்களுக்கு நடத்துகிறார். தின, டெஸ்டுகளை நன்றாகப் படிக்கும் மாணவியர் திருத்திவிட, மற்ற தேர்வுத்தாள்களை திருத்துவது நவமணியே. சமச்சீர்க் கல்வி புத்தகத்தை படித்துக் காட்டிய போது, "நல்லா இருக்கில்ல... ஆனா, கொஸ்டின் ஸ்டைல் தான் மாறல என்று அலுத்துக் கொண்டார் என்கிறார் நவமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக