நான்கு லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெற, சொத்துப் பிணையம் தேவையில்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தாலும், வங்கிகள் கடன் தர கடும் நிபந்தனைகள் விதிக்கின்றன.
எம்.பி.ஏ., இரண்டாண்டுகள் படிப்பதற்கு மூன்று லட்ச ரூபாய் கல்விக் கட்டணமாக இருந்தால், முழுத் தொகையும் வங்கிகள் தருவதில்லை. ரூ. இரண்டு லட்சம் மட்டும் வழங்க முன்வருகின்றன. மீதித் தொகையை செலுத்த முடியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
இது முதல் தலைமுறையாக பட்டம், பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிடும் நிலையை ஏற்படுத்தும். தற்போது மாநராட்சியில் எந்த வார்டு பகுதியில் குடியிருக்கிறார்களோ, அதற்குட்பட்ட வங்கியில் தான் கல்விக்கடன் பெறவேண்டும், என வலியுறுத்துகின்றனர்.
பெற்றோர் வேறு வார்டில், வேறு வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், அங்கே கடன்பெற அனுமதியில்லை. இதற்கு முன், எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ, அங்கேயே கடன் பெறும் வசதி இருந்தது. வங்கிக்கும் வாடிக்கையாளரைப் பற்றிய அறிமுகம் இருந்தது. தற்போதைய நடைமுறையால், வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர, வேறு பயனில்லை.
இருக்கும் பழைய வங்கிக் கணக்கையும் கிடப்பில் போடுகின்றனர். பழைய முறையை பின்பற்றி கடன் வழங்குவதோடு, நான்கு லட்சத்திற்கு உட்பட கல்விக் கட்டணத்தை, வங்கிகள் முழுமையாக வழங்க வேண்டும், என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக