சிவகங்கை, செப். 4: வங்கி எழுத்தர் இன பணியிடங்களுக்கான பொது எழுத்துப் போட்டி தேர்வுக்கு சிவகங்கை மனித வள மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மத்திய அரசு 19 பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவையான எழுத்தர்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய அனுமதியளித்துள்ளது. அதன்படி சுமார் 20 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களை நிரப்ப 27.11.2011 அன்று தேர்வு நடைபெறவுள்ளது.ஆன்-லைனில் விண்ணப்பம்இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை கணினியில் ஆன்-லைன் மூலமாகத்தான் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய இம்மாதம் 24-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.ibps.in என்ற இணைய தளத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கையின் நகலை எடுத்து அதில் குறிப்பிட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை கணினி மூலம் அனுப்ப வேண்டும்.தகுதிகள்இத்தேர்வை 1.8.2011 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவர்களும், 28 வயதை பூர்த்தி செய்யாதவர்களும் எழுதலாம். மேலும் 10-ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் அல்லது 12-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் அல்லது பட்டப்படிப்பில் ஏதாவது ஒரு அங்கரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டம் 1.8.2011க்கு முன் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.வினாத்தாள் 250 எழுத்து தேர்வுக்கான கேள்விகளைக் கொண்டிருக்கும். இதனை 150 நிமிடங்களில் அதாவது இரண்டனை மணி நேரத்தில் எழுத வேண்டும். ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண் என்ற விகிதத்தில் ஒவ்வொரு சரியான விடைக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் ஒவ்வொரு தவறான விடைக்கும் கால் மதிப்பெண் குறைக்கப்படும்.தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் அட்டை அவர்களுக்கு நேரடியாக அனுப்பப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் வங்கி, எழுத்தர் பணியிடத்தை நிரப்ப விளம்பரம் செய்தவுடன் நேரடியாக விண்ணப்பித்து பணியிடத்தை பெறலாம். மதிப்பெண் அட்டை ஓராண்டுக்கு செல்லுபடியாகும்.விண்ணப்ப கட்டணம்தேர்வு எழுத விரும்புவோர் விண்ணப்ப கட்டணம் ரூ.350 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதும். இக்கட்டணத்தை ஆன்-லைன் மூலமோ அல்லது ஏதாவது ஒரு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இம்மாதம் 23-ம் தேதிக்கு முன் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ரசீது பெற்ற பின்னரே விண்ணப்பத்தை கணினி மூலம் பூர்த்திசெய்து புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.இலவச பயிற்சிவங்கி எழுத்தர் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு ஆர்.கற்பூரசுந்தரபாண்டியன் சாந்தா அறக்கட்டளை நடத்திவரும் சிவகங்கை மனித வள மையத்தில் சைதை சா.துரைசாமியின் மனித நேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து, இலவச பயிற்சி அளிக்கப்படும்.இந்த பயிற்சி வகுப்பு 18.9.2011 ஞாயிறு காலை 10 மணிக்கு தொடங்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கே.ஆர். தொடக்கப்பள்ளி மேலூர் சாலை, சிவகங்கையில் நடைபெறும்.20.11.2011 அன்று மாதிரித் தேர்வுடன் பயிற்சி வகுப்புகள் நிறைவு பெறும். இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் தங்கள் பெயர், முகவரி, கைபேசி எண் போன்ற விவரங்களை கே.ஆர்.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் கொடுத்து முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் உதவுவார்.இப்பயிற்சி வகுப்பில் சேர நுழைவுத் தேர்வு 11.9.2011 காலை 10 மணிக்கு மன்னர் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கையில் நடைபெறும் என்று மனித வள மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரான கற்பூரசுந்தரபாண்டியன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக