பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/16/2011

கேட் தேர்வில் மாற்றங்கள்: பொறியியல் சாராத மாணவர்களுக்கும் வாய்ப்பு

சென்னை: இந்தியாவின் பெருமைமிகு கல்வி கேந்திரங்களான ஐ.ஐ.எம்.,களில் பயில்வதற்கான கேட் தேர்வில் சில நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுவரை ஐ.ஐ.எம்.,களில் இன்ஜி., மாணவர்களின் ஆதிக்கமே இருந்தது; இப்புதிய மாற்றங்கள் இதர துறை மாணவர்களுக்கும், பெண்களுக்கும் கூடுதல் வாய்ப்பை அளிப்பதாக உள்ளன.
இந்தியாவில் 13 ஐ.ஐ.எம்.,கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மேலாண்மை சார்ந்த படிப்புகளுக்கு இந்த கேந்திரங்களே உச்ச கல்வி நிறுவனங்களாக அறியப்படுகின்றன; உண்மையும் அதுதான். இவற்றுள் நுழைய மாணவர்கள் கேட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். பெரும்பாலான மாணவர்களின் கனவும் அதுதான். ஆனால், சற்று சிரமமான விஷயமும் கூட. நடப்பாண்டில் இருந்து தேர்வு முறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ‘மாற்றம் ஒன்றே நிலையானது’ என்ற புகழ்பெற்ற கிரேக்க தத்துவமொழியை ஐ.ஐ.எம். நிர்வாகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
மாற்றங்கள்
www.catiiim.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தேர்வுப் பிரிவுகள் மூன்றிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளன.
1.Quantitative Ability and Data Interpretation
2.Verbal Ability and Logical Reasoning
என்ற இருபிரிவுகளில் தலா 30 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 70 நிமிடங்களாக, 140 நிமிடங்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டை விட ஐந்து நிமிட நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த நேரங்களில், அந்தப் பிரிவுகளுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளவோ, முந்தைய பிரிவுக்கு மீண்டும் செல்லவே தேர்வு எழுதுவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Check-in நடைமுறைகள் 90 நிமிடங்களுக்கு முன்னதாகத் துவங்கும். பிரதான தேர்வுக்கு முன் 15 நிமிட ஆயத்த நேரம் வழங்கப்படுகிறது. 33 தேர்வு மையங்களுடன் பிலாய், ஜம்மு, டேராடூன் நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. விண்ணப்ப வினியோக மையங்களின் எண்ணிக்கை 30 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆக்சிஸ் வங்கியின் 201 கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற முடியும்.
இதுதவிர, எண்ணியல்(Numerical) திறன் சார்ந்த கேள்விகள் மட்டுமே அதிகம் இடம்பெற்று வந்த நிலையில், எண்ணியல் சாராத திறன்களுக்கான வினாக்களுக்கும் சமபங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் Quantitative Ability மற்றும் Data Interpretation தொடர்பான கணிதவியல் வினாக்கள் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு கேட்கப்பட்டிருக்கும். இதன்காரணமாகவே ஐ.ஐ.எம்.,களில் இன்ஜி., மாணவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதால், இன்ஜி., துறை சாராத மாணவர்கள் அதிகளவில் இடம்பெற வகைசெய்யப்பட்டுள்ளது. இன்ஜி., துறைபோலவே, மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக இருந்து வந்ததற்கும் தீர்வு காணப்பட்டு, மாணவிகளும் நுழைய இம்மாற்றம் வழிகோலும்.
கொல்கத்தா ஐ.ஐ.எம்., பேராசிரியரும், ‘கேட் 2011’ அமைப்பாளருமான பேராசிரியர் ஜானகிராமன் மூர்த்தி கூறியதாவது: கேட் தேர்வு தொடர்பாக ஏதாவது ஒரு கடைசிநேர ஆச்சர்யம் காத்திருக்கும். இம்முறை தேர்வுமாற்றங்கள் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே தெரிவித்து விட்டோம். தேர்வு முறையில் மாற்றம் இருந்தபோதும், அதன் தரத்தில் மாற்றமிருக்காது. நாங்கள் பகுத்தாயும் திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்புத்திறன் மிக்க மாணவர்களை எதிர்பார்க்கிறோம், என்றார்.
ஐ.ஐ.எம்., ராய்பூர் நிறுவன இயக்குனர் சகாய் கூறுகையில், “வழக்கமாக ஐ.ஐ.எம்.,களில் 90 சதவீதம் இன்ஜி., மாணவர்களாக இருப்பார்கள். சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், பெண்கள் மற்றும் இன்ஜி., சாராத மாணவர்களுக்கு வாய்ப்பை அதிகரிக்க முடிவு செய்தோம்,” என்றார்.
கேட் தேர்வு எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்னை நேர மேலாண்மை. ஒரே பகுதிக்கு அதிக நேரம் விரயம் செய்வதை இப்புதிய முறை தடுக்கிறது. ஐ.எம்.எஸ்., மேலாண் இயக்குனர் கமலேஷ் சஞ்சானி கூறுகையில், “இம்மாற்றங்கள் நுழைவுத்தேர்வை இன்னும் சிறப்பானதாக மாற்றியிருக்கின்றன. தேர்வு எழுதுவோர் சரிசமமான நேரத்தை இரு பிரிவுகளுக்கும் செலவிட முடியும். இதனால், நிஜமான போட்டியாளர்களை தேர்வு உருவாக்கும்.
T.I.M.E இயக்குனர் மானெக் தருவாலாவின் கூற்றுப்படி, ‘நேர பிரச்னையில் இருந்து மாணவர்கள் தப்பித்துள்ளனர். இதற்கு முந்தைய கேட் தேர்வுகளைப் போல் நேரப் பங்கீடு ஒரு பிரச்னையாக இராது. எந்தப் பகுதிக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. பெரும்பாலான மாணவர்களுக்கு நேரத்தைப் பங்கிடுவதே கடினமான செயலாக இருந்தது. தற்போது, சமமாகப் பங்கிட்டிருப்பதை அவர்கள் உறுதிசெய்து கொள்கின்றனர். இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதும் சாதகமான விஷயமே. பலவீனமான பகுதியில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்&' என்றார்.
தேர்வுக்கு தயாராதல்
தேர்வுக்கு தயாராகுபவர்கள் அடுத்த மூன்று மாதங்களை, இருபிரிவுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்பது பற்றி உறுதி செய்துகொள்ள வேண்டும். “30 வினாக்களில் 24 வினாக்களை எழுதினாலே, மாணவர்கள் அப்பிரிவின் பெரும்பாலான பகுதிகளை முடித்து விட்டதாகக் கொள்ளலாம். இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை கேட் தேர்வுக்கு தயார் செய்வதற்குப் போதுமானது. சரியான வியூகமும், சரியான இலக்கும் இருந்தால் கேட் தேர்வுக்கு எளிதாகத் தயாராகலாம்” என்கிறார் ஐ.எம்.எஸ்., மேலாண் இயக்குனர் கமலேஷ்சஞ்சானி.
T.I.M.E இயக்குனர் தருவாலாவின் அறிவுரை சற்று வித்தியாசமாக உள்ளது. “தேர்வுக்கான பாடங்கள் மாறவில்லை. தேர்வு முறையில் தான் சற்று மாற்றமிருக்கிறது. எனவே, தேர்வுக்கு தயாராவதில் எந்த மாறுபாட்டையும் நாங்கள் பரிந்துரைக்கப் போவதில்லை. பயிற்சித் தேர்வுகளை அடிக்கடி எழுதிப்பார்ப்பதே சிறப்பானது,” என்கிறார் அவர்.
சர்வதேச அளவில் எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வாக ஏற்றுக் கொள்ளப்படும் GMAT தேர்வுக்கு மிக அருகில் நெருங்கி வந்திருக்கிறது CAT தேர்வு.  முதலில் ஆன்லைனுக்கு வந்தது; பின், அளவீட்டுத்திறன்(Quantitative)
மற்றும் தொடர்பு கொள்ளும் திறன்(Communication Skill) இரண்டும் சமமான முக்கியத்துவம் கொடுத்தல், நேரப்பகிர்வு போன்ற விஷயங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. எதிர்காலத்தில் ஜிமேட்டில் உள்ள இன்னும் சில விஷயங்கள் கூட கேட் தேர்வில் கொண்டு வரப்படும் என யூகிக்கலாம்.

நன்றி: கல்விமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக