வரும் கல்வியாண்டு முதல் இந்தியா முழுவதும், மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்விற்கான பாடங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
2012ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கான பாடங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
எம்.சி.ஐ. இணையதளத்தில், http://www.mciindia.org/NEET/NEETUG.aspx
என்ற இணைப்பில் நுழைவுத் தேர்வுக்கான அனைத்து விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒரு சில படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2012ம் கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வு முடிவை அடிப்படையாக வைத்து இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ சேர்க்கை நடைபெறும்.
இதனால், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பல்வேறு பல்கலைகள் நடத்தும் தனித் தனி நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டிய சூழல் தவிர்க்கப்படும். இந்தியாவில் மட்டும் 300 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 180 கல்லூரிகள் தனியாரால் நடத்தப்படுவதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக