சென்னை: தமிழ்நாடு முழுவதும் விடுதிகளில் தங்கி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் மாதந்திர உதவித் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் 1500 இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ-மாணவிகளுக்கு குளியல் சோப்பு, சலவை தூள், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கிட செலவாகும் தொகையை ரூ.25லிருந்து ரூ.50 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இதே போன்று கல்லூரி விடுதி மாணவ-மாணவிகளுக்கான தொகையை ரூ.35லிருந்து ரூ.75 ஆக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 3 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரம் கூடுதல் செலவாகும் என அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக