அகில இந்திய அளவில் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களக்கு அரசு தேர்வுத் துறை சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் த. வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் தேசிய மெரிட் ஸ்காலர்ஷிப் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மண்டல அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனுமதி இலவசம். பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். மாதிரி வினாத்தாள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மண்டல அளவில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் விவரம் :
விழுப்புரம் - 6.11.11, தெய்வானை அம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, மெயின் ரோடு, விழுப்புரம்
சென்னை - 7.11.11, சென்னை கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு
திருச்சி - 12.11.11, பிஷப் ஹீபர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், திருச்சி
நெல்லை - 13.11.11 - சாராள் டக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.
மாணவ, மாணவியர் அவரவருக்கு ஏற்ற பயிற்சி மையத்தில் பங்கேற்கலாம். உடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து வருவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக