பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/22/2013

புதிய பென்சன் மசோதா சந்தை திவாலானால் அனைத்தும் பறிபோகும் : மக்களவையில் சிபிஎம் தலைவர் எச்சரிக்கை

ஒருவர் ஓய்வுபெறும்போது, தான் இவ் வளவுதான் ஓய்வூதியம் பெறப்போகிறோம் என்று சொல்லமுடியாத அளவில் உள்ள ஓர் ஓய்வூதியத் திட்டம் நாட்டிற்கு தேவையா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் புதனன்று ஓய்வூதிய சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பாசுதேவ் ஆச்சார்யா பேசியதாவது:

ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சி உறுதியாக எதிர்க்கிறது. 2004 ஜனவரி 1 முதல் இதனை ஐ.மு.கூட்டணி அரசு அமல் படுத்தி வருகிறது. அதனைச் சட்டரீதியாக மாற்று வதற்காக இச்சட்டமுன்வடிவினை இப்போது கொண்டு வந்திருக்கிறது. இதற்காக ஓர் ஆணை யம் உருவாக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ள பிரதமர், மேலும் சில கடினமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த புதிய ஓய்வூதிய முறை யாகும்.

நம்முடைய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் அமெரிக்க அரசாங்கத்தின் கட்ட ளைப்படிதான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓய்வூதிய நிதியச் சட்டமுன்வடிவும் அதன் கட் டளைப்படிதான் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இவ்வாறு இதனை மாற்றவேண்டும் என்று அமெரிக்காவும், உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஏன் துடிக்கின்றன? பழைய ஓய்வூதிய அமைப்பு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் என்பது ஒன்றும் கருணைத் தொகை அல்ல. நாம் சுதந்திரம் பெற்றபின் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு ஊதியக்குழுக்களைப் பார்த்து விட்டோம். இந்த ஆறு ஊதியக்குழுக்களுமே ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் மற்றும் தொழி லாளர்களின் பிரிக்கமுடியாத உரிமை என்று ஒரே சீராகப் பரிந்துரைத்திருக்கின்றன.

எனவே. இது அவர்களுக்கு அளிக்கப்படும் கருணை அல்ல. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஊழியர்களுக்கு உறுதியானமுறையில், பயன் பாடுகள் அளிக்கப்படவில்லை. ஊழியர்களின் சேமிப்பு பங்குச் சந்தையில் போடப்படவிருக் கின்றன. அது என்னாகும்? இது தொடர்பாக எந்த உறுதிமொழியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வில்லை. புதிய ஓய்வூதியச் சட்டத்தில் பாஜக திருப்தி கொண்டிருப்பது எப்படி? என்று எனக்குத் தெரியவில்லை. தொழிலாளர்களின் தொகை பங்குச்சந்தை யில் போடப்பட்டு, அதில் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற் பட்டால், ஊழியர்களுக்கு எந்தத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்படி உள்ள ஒரு சட்ட முன்வடிவை எப்படி பாஜகவினர் ஆதரிக் கிறார்கள்? மேலும் பொருளாதாரத்தில் பண வீக்கத்தின் அழுத்தத்திற்கு ஏற்ப ஊழியர்கள் பெறும் உண்மை ஓய்வூதியத்தின் மதிப்பும் குறையும். பல நிறுவனங்கள் ஆசைகாட்டி ஊழியர்களை மோசம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

குறிப்பாக நான்காம் நிலை ஊழியர்கள் ஏமாற்றப்படுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி 10 விழுக் காடு ஊதியம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இவ்வாறு 2004 ஜனவரி 1லிருந்தே பிடித்தம் தொடங்கிவிட்டது. இதே அளவு தொகையை அரசும் செலுத்த வேண்டும். இவ்விரண்டு தொகையை வைத்து ஒரு நிதியம் உருவாக்கப்படுகிறது. இதனை நிதிய மேலாளர் எனப்படும் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார்கள். ஒரேயொரு மேலாளரைத் தவிர மற்ற அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். மாபெரும் தொகை இவர்களிடம் தூக்கிக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதன் பொருள், அரசாங்கத்தின் பணம், தனியார் நலன்களுக்காகப் பயன்படுத்தப் பட விருக்கிறது என்பதே. புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப் படுவதன் மூலம் இருவித ஊழியர்களும் உரு வாக்கப்பட விருக்கிறார்கள். ஒரு பகுதியினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உத்தர வாதமான வருமானத்தைப் பெறுவார்கள். புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தில் மாதந்தோறும் பத்து விழுக்காடு சம்பளத்தைத் தரும் ஊழியர்கள். ஆனால், இவர்கள் ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசாங்கத்தால் இவர்களுக்குச் சொல்ல முடியாது.

ஐ.மு.கூட்டணி 1 அரசாங்கக் காலத்தில் இக்கேள்வி யைப் பலமுறை நான் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டேன். அவர்களின் தொகை சந்தை நிலவரத்தைச் சார்ந்திருக்கும் என்பதால் ஓய்வூதியம் எவ்வளவு பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை என்று பதிலளித்தார். சந்தை திவாலாகிப்போனால், ஊழியர்கள் அனைத்தையும் இழந்து விடுவார்கள். இவ்வளவு மோசமான சட்டத்தை நாம் ஏன் கொண்டுவர வேண்டும்? நாட்டில் ஒரு கோடிக் கும் மேல் ஊழியர்கள் மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும், வங்கி மற்றும் இதர நிறுவனங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இவர்களின் எதிர்கால வாழ்வை ஏன் கேள்விக்குறியாக்குகிறீர்கள்? இது அரசிய லமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவிற்கு எதிரான தாகும்.

யாருடைய கட்டளைப்படி, யாருடைய நோக்கம் நிறைவேறுவதற்காக இதனைக் கொண்டுவருகிறீர்கள்? இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். அந்த ஒன்று என்ன? அதுதான் மிகவும் முக்கியமான பரிந்துரையாகும். நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையில், ‘‘சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெறுவதை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்தில் ஒரு ஏற்பாட்டை அரசு உருவாக்கிட வேண்டும். அதன் மூலம் இதர ஓய்வூதியதாரர்களுக்கு எதிராக எந்தவிதமான பாதகமும் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிலைக்குழு விரும்புகிறது’’ என்று கூறியிருந்தது. மற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய ஓய் வூதியதாரர்களுக்கும் இடையே பாகுபாடு இல் லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்று நிலைக்குழு கோரியிருந்தது. இந்த பரிந்துரை யைத்தான் அரசு கண்டுகொள்ளவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வர லாற்றுச் சிறப்புமிக்க இரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாட்டிலுள்ள 11 மத்திய தொழிற்சங் கங்கள் இணைந்து கடந்த பிப்ரவரி 20, 21 தேதி களில் நடைபெற்ற மேற்படி வேலைநிறுத்தத் திற்கான அறைகூவலை விடுத்தன. ஐஎன்டியுசி முதல் பிஎம்எஸ் உட்பட அனைத்துத் தொழிற் சங்கங்களும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. ‘‘அரசாங்கம் புதிய ஓய்வூதியத்திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது பெரும்பகுதி ஊழியர்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறது. இது, ஓய்வூதியப்பயன்களைப் பெறுவதை ஊழியர்களிடமிருந்து பறித்துவிடு கிறது’’ என்று கூறித்தான் இவ்வேலை நிறுத்தம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டம் சட்டமானால், அடுத்த 34 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளி யேறும் பணத்தின் மதிப்பு தற்போதுள்ள 14 ஆயி ரத்து 284 கோடி ரூபாயிலிருந்து 57 ஆயிரத்து 088 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது நாட்டிலுள்ள ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரா னது. எனவே அரசு, வழக்கத்திலிருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஓய்வூதிய தாரர் இறந்தால் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடை யாது. பணிக்கொடைக்கும் எந்த வாய்ப்பும் கிடையாது. எனவே இச்சட்டமுன்வடிவை நாங்கள் உறுதிபட எதிர்க்கிறோம். அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும்.

நன்றி- தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக