திருநெல்வேலி:
பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை
டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பஞ்., யூனியன்
துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய்,
தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு
12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு
செய்யப்படுகிறது. இந்த நிதியின் மூலம் பள்ளிகளுக்கு வேண்டிய கட்டமைப்பு
வசதிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில்
அனைத்து துவக்கப் பள்ளிகளும் தலா 3 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகள் 5
ஆயிரம் ரூபாய் டி.டியாக எடுத்து சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு
26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் தலைமை
ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வாரியாக
போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென
இந்த டி.டிக்களை அனுப்ப வேண்டாம் என்றும், இக்கட்டணத்தை பள்ளி மானிய
தொகையில் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால்
கமிஷன் தொகையுடன் டி.டி எடுத்தவர்கள் மீண்டும் மானிய தொகையில்
செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
எனவே, வருங்காலங்களில் இதுபோன்ற
குளறுபடிகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக