மேலூர்:
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வழங்கப்பட்ட லேப்டாப்
கள் ஆசிரியர்களின் சொந்த தேவைகளுக்குப் பயன்படுவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. மேலும், பல பள்ளிகளில் லேப்டாப் திருடுபோனதாக புகார்
செய்யப்பட்டுள்ளது.
மேலு£ர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார்
20க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு
கணினி சம்பந்தமான அடிப்படை கல்வி கற்று கொடுக்க தமிழக அரசு இலவச லேப்டாப்
வழங்கியுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு கணினி சம்பந்தமான படிப்பு சொல்லி
கொடுக்காமல் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளுக்குச் எடுத்து செல்வதாக மாணவர்கள்
குற்றம் சாற்றுகின்றனர்.
ஏற்கெனவே பட்டூர் பள்ளியில் லேப்டாப் காணாமல்
போனதாக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை
கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. அடுத்த சம்பவம் புலிப்பட்டி பள்ளியில்
அரங்கேறியுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,
Ôஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடல், கதை
மற்றும் படிப்பு சம்பந்தமான கணினி சம்பந்தமான அடிப்படை கல்வி சொல்லி
கொடுப்பதற்காக அரசு லேப்டாப் வழங்கி உள்ளது. ஆனால், சில ஆசிரியர்கள் தங்கள்
சொந்த தேவைகளுக்காக வீட்டிற்கு கொண்டு செல்வதாக தெரியவருகிறது. மேலும்
புலிப்பட்டியில் காணாமல் போன மடிக்கணினி தொடர்பாக போலீசார் விசாரித்து
வருகின்றனர்Õ என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக