தமிழகத்தில்
தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி
ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடை
பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில்
டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்
என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட
அளவிலான கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது. இதில்
ஒரு மாவட்டத்திற்கு 2 ஆசிரிய பயிற்றுனர்களும், 2 மாவட்ட ஆசிரியர் பயிற்சி
நிறுவன 2 விரிவுரையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
மாவட்ட அளவில்
அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரிய கருத்தாளர்களுக்கு வரும் 27ம் தேதி
மற்றும் 28ம் தேதி நடக்கிறது. குறு வள மைய அளவில் தொடக்க மற்றும் உயர்நிலை
ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி பயிற்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக