சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டாரத்தில் பணிபுரியும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் அரசு விதிகளை புறம் தள்ளி தனக்கு வேண்டாதவர்களை பலி வாங்குவதில் முனைப்பாபக செயலாற்றி வருகின்றனர். பெண் தலைமையாசிரியர்களை மாலை 5 மணிக்கு மேல் வரவழைத்து கூட்டம் நடத்துவதை ஏற்க இயலாது எனவும். அரசு உத்தரவிற்கு நேர் மாறான செயல் எனவும் TNPTF சுட்டிக்காட்டியதால் கோபமுற்ற அலுவலர்கள் தன் அதிகார துஷ்பிரோயகத்தை காரணமின்றி செயல்படுத்த முயல்கின்றனர். தனது இரு சக்கர வாகனத்தின் எரி பொருள் செலவை மிச்சப்படுத்த இரண்டு AEEO க்களும் இணைந்தே ஒரே பள்ளிக்கு பார்வைக்கு சென்று வருகின்றனர். ஆனால் பயண படிகளை மட்டும் அரசிடம் தனித்தனியாக பெற்றுக்கொள்கின்றனர். தனியார் பள்ளிகள் சம்பள பட்டியலுடன் முகப்பு கடிதம் தேவையில்லை என்ற பொழுதும், ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்றாமல் பட்டியல்களை திரும்ப அனுப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து TNPTF மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரிடம் முறையிட்ட பின்பு, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் கல்லல் வட்டார AEEO அலுவலகத்திற்கு நேரிடையாக சென்று பழைய நடைமுறையே தொடரட்டும் என வாய் மொழி உத்தரவு வழங்கிய பின்பும் கூட, உயர் அலுவலரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு தான் தோன்றி தனமாக இரண்டு ஏ.இ.இ.ஓ.க்களும் செயலாற்றி வருகின்றனர். அலுவலகத்தில் இலஞ்சத்தை அடியோடு ஒழிக்க முயலும் இயக்கத்தால் தங்களது வருமானம் முற்றிலும் தடைபடுவதால் தனது ஆற்றாமையை தவறாக வெளிப்படுத்தி வருகின்றனர். பட்டியலுக்கு முகப்பு கடிதம் தேவையில்லை எனவும், அதற்காக ஊழியர்களின் சம்பளம் எந்த விதத்திலும் தடைபடக்கூடாது என்றும் தகவல் உரிமைச்ட்டத்தின் கீழ் அரசு தெளிவுரை வழங்கிய பின்பும் கூட தன்னுடைய அதிகார வக்கிரத்தை நிறுத்துவதாக தெரியவில்லை. கல்வித் தரத்தை முன்னேற்றுவதில் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய அலுவலர்கள் அவர்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கில் செயல்படுவது என்பது கல்வித்துறையில் ஒரு பதற்றத்தை தோற்றுவிக்கும். சிவகங்கை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்க முயலும் கூடுதல் முதன்மைக் கல்வி அலவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களின் முயற்சி இந்த மாதிரி சிறு பிள்ளை தனமான அதிகாரிகளால் செயலற்று போய்விடும் அபாயம் உள்ளது. விதிகளை சரியாக புரிந்து கொள்ளாமலும், நிர்வாகம் பண்ண இயலாமலும் உள்ள இந்த மாதிரி AEEO க்களை உடனடியாக கல்வித்துறை திரும்ப பெற வேண்டும். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் உடனடியாக தலையிட்டு நிர்வாக திறனற்ற கல்லல் வட்டார AEEO க்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்ப பரிந்துரை செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகிகள் DEEOஅவர்களை திங்கள் கிழமை (18.11.2013) சந்திக்க உள்ளனர். கோரிக்கை ஏற்காவிட்டால் TNPTF தன்னுடைய இயக்க நடவடிக்கையை தொடரும் என்பதில் உறுதியாக உள்ளது.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக