சிவகங்கை,: தமிழகத்தில் மொழிப் பாடங்களை கற்பிக்க மொழியாசிரியர்களை
மட்டுமே பயன்படுத்த வேண்டும், மாற்று பாட ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது
என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ, ஆங்கில மொழி ஆசிரியர் கழக மாநில செயலாளர் சேவியர்ஆரோக்கியதாஸ், வரலாறு ஆசிரியர் கழக அமைப்பு செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள்அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போதிய பாட வேளை கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் 9ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் நிலை உள்ளது. 6முதல் 10ம் வகுப்பு வரை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்தொகுதி ஆகும். இதில் முதுகலை ஆசிரியர்களை பயன்படுத்தினால் 9, 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் இது போன்ற நிலையை தவிர்க்க ஆசிரியர்களின் பணித்தொகுதி அடிப்படையில் கற்பித்தல் பணி வழங்க வேண்டும். மொழிப்பாடம் கற்பிக்க மொழியாசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக